சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி:

 சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி:

இஸ்ரோ தலைவர் சிவன்:

    பெங்களூரு: சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 600 கோடி ரூபாயில் சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

   பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான்-2 திட்டத்தின் போது பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாகக் கட்டிப்பிடித்ததால், அழுதுவிட்டேன்.

   தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கிவிட்டது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

   சந்திரயான்-2 திட்டத்தில், திட்டமிட்டபடி லேண்டர் வேகம் குறையாமல், வேகமாகச் சென்று நிலவில் மோதியதால் அதனை வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் போனது. இருப்பினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது அடுத்த 7 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயங்கி, நிலவு பற்றிய அறிவியல் தகவல்களை அனுப்பும் என்று கூறினார்.
 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...