தேனி அருகே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மோதல்: இளைஞர் மரணம்

   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்களம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 2 மணியளவில் சாலையில் புத்தாண்டு கொண்டாடிய போது, ஜெயமங்களத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

   இந்நிலையில், இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டதில் கார்த்திக் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனக்கு போலீஸார் அனுப்பி வைத்து, மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள், கொலைக்கு காரணமாணவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையின் வெளிப்புற கதவுகளைப் பூட்டி 3 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளே செல்ல முடியமல் தவித்தனர்.

   பின்னர், காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை தனிப்படை அமைத்து கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!