ஜனவரி 5ஆம் தேதி வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடரும்:
ஜனவரி 5ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழ்நாடு இருப்பதால் மழை பெய்கிறது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும். ஜனவரி 5ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
