4. மாவலிவாணராயன் பாண்டியர்களின் மதுரை நகரம் தான் இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தலைநகரம். சோழர்களும், சேரர்களும் பாண்டியப் பேரரசின் கீழ் அடிபணிந்து விட்டதின் விளைவுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைநகரமாக மதுரைக்கு முடி சூட்டியது. அதுமட்டுமின்றி பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட பாண்டியர்களது மதுரை நகரமானது தமிழகத்தின் பெரும் வாணிபத் தளமாகவும் செயல்பட்ட வண்ணம் இருந்தது. அல்லங்காடி, பகலங்காடி என இடைவிடாமல் வணிகம் நடந்து கொண்டிருப்பதால் பல நாட்டவரும் மதுரை வீதிகளில் பொருட்களை விற்பது, வாங்குவது எனக் கூட்டம் கூட்டமாகக் […]Read More
Tags :சரித்திரத் தொடர்கதை
3. கயல் சகோதரிகள் பெரும் மீசையும், அடர்ந்த பிடரி முடிகளும், பலத்த மேனியையும் கொண்ட வாணாதரையார் காலிங்கராயர் பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக ஆட்சி செய்யும் பலரில் குலசேகர பாண்டியனுக்கும் பாண்டிய அரசுக்கும் மிக நெருங்கியவர். எந்தளவு நெருங்கியவர் என்றால் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நன்மைக்காகப் பல ஆலயங்களை எழுப்பி மன்னனது மனதில் சிறப்பிடத்தைப் பிடித்து வைத்திருப்பவர். அப்படிப் பாண்டிய நாட்டில் பெரும் செல்வாக்கினைக் கொண்ட காலிங்கராயர் அந்த இரவுப் பொழுதில் களங்கனது ஒளியின் […]Read More
2. மலர் கொய்த வளரி பரந்து விரிந்து கிடக்கும் பாண்டியர்களின் தலைநகரான மதுரைக் கோட்டைக்குள்ளே இதயப் பகுதியான அரண்மனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்தது அந்த அழகிய நந்தவனம். சுற்றி எப்போதும் நறுமணம் கமழும் அந்த நந்தவனத்தின் நடுவே நேர்த்தியான வட்டவடிவில் உருவாக்கப்பட்டிருந்தது ஓர் சிறிய குளம். அந்தக் குளத்தின் நடுவே பெண்ணொருத்தி அமர்ந்தபடி யாழ் மீட்டும் சிற்பம் ஒன்று மிக நுட்பமாக செதுக்கப்பட்டிருக்க, அதைச்சுற்றியும் உள்ள நன்னீரில் தாமரைப் பூக்களின் நடுவே பல வகை வண்ண மீன்களும் கோழிகளும் […]Read More
15. இணைந்த கரங்கள்..! ஆரூர் ஐயாறப்பர் சன்னதியில், ஈசன் முன் கைகுவித்து நின்றிருந்தார் பல்லவ மன்னர் நந்திவர்மர். தெள்ளாற்றில் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரை வென்று, பாண்டியப்படையைத் தொடர்ந்து சென்று, பழையாறை, நள்ளாறு ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தி, வைகையாற்றைக் கடந்து பாண்டியப்படையை விரட்டி, பெருவெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன், பாண்டியர்களிடம் இழந்த தங்கள் பிரதேசங்களை மீட்டெடுத்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, அப்போதுதான் பூத்த மலரைப்போல முகிழ்ந்திருந்தது அவரது முகம். பக்கத்தில் மலரே உயிர் பெற்று வந்தது […]Read More
14.வெற்றித்திருமகன் நந்திவர்மர் வீசிய வாளில் தனது கைவாளை பறிகொடுத்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரின் தலையை நோக்கி வேகமாக பாய்ந்தது பல்லவ மன்னரின் வாள். ஸ்ரீவல்லபர் வீரசுவர்க்கம் புக தயாரானவர் போல விழிகளை மூடி ஒரு கணம் மதுரை திருவாலவாயுடையாரை மனதிற்குள் பிரார்த்தித்தார். மிகுந்த ஆக்ரோஷத்துடன் நந்திவர்மர் வீசிய வாள், ஸ்ரீவல்லபர் தலையை கொய்யவிருந்த அந்த கண நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அந்த மாற்றம் நிகழ்ந்தது. சில கண நேரத்திற்கு முன்னர் ஸ்ரீவல்லபர் இருந்த அதே நிலையை […]Read More
13. தொடங்கியது தாக்குதல் எப்போதும் போல தான் நாள் தொடங்கியது. எப்போதும் போல தான் சுக்கிரன் விடை பெற்றான். எப்போதும் போல் தான் ஆதவன் விழித்தான். ஆனால், அன்று சுக்கிரன் காண அஞ்சி ஒளிந்துக் கொள்ளக் காரணமான போரை, ஆதவன் கண்டே ஆகக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆதவன் வெளிப்பட்ட போதே, தெள்ளாற்றில் இருபுறமும் வரிசை கட்டி அணிவகுத்து நின்றன படைகள். ஒரு புறம் பல்லவப்படை நிற்க, எதிர்த் திசையில் பாண்டியப்படை தயாராக நின்றிருந்தது.கதிரவனின் இளம் கதிர்கள் வீரர்கள் […]Read More
12. பாண்டியர் பாசறை காஞ்சியை நோக்கிப் புறப்பட்ட பாண்டியப்படையில் முன்னணியில் வந்துகொண்டிருந்த வீரர்கள் ஒரு பெரிய திடலை அடைந்தனர். அந்தத் திடலின் மறுபக்கம் ஒரு படை முகாமிட்டிருப்பதைக் கண்டதும் சற்று அதிர்ச்சியடைந்து, மேற்கொண்டு முன்னேறாமல் அங்கேயே காத்திருக்கத் தொடங்கினர். சற்று நேரத்தில் படைத்தளபதி அழகன், பாண்டியப்படை காத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். “திடலுக்கு அந்தப்பக்கம் பல்லவப்படை காத்திருக்கிறது. பல்லவப்படை எந்நேரமும் தாக்குதலைத் தொடங்கலாம். அனைவரும் தயாராக இருங்கள்” சொல்லிக்கொண்டே வந்தவர் அருகிலிருந்த வீரனைப் பார்த்தார். “சமையல் பொருட்கள் […]Read More
11 தெள்ளாறு நந்திவர்மர் உத்தரவிட்டபடி பல்லவப்படைகள் தெள்ளாறு சென்று தனது பாசறையை அமைத்தன. புரவிப்படை ஒரு பக்கத்திலும், யானைப்படை ஒரு பக்கத்திலும் முகாமிட்டிருந்தன. ஒரு புறம் இரதங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. இன்னொரு புறம் காலாட்படை வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். சற்று தொலைவில், சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர். பெரிய பெரிய பாத்திரங்களில் அரிசி, கேழ்வரகு, சோளம் ஆகியவை கஞ்சியாக சமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் மாமிசம் தயாராகிக் கொண்டிருந்தது. இன்னொரு புறம், காய் வகைகள் நீரில் […]Read More
10. பல்லவப்படை காஞ்சிபுரத்தில் சேனாதிபதி கோட்புலியார் பல்லவப்படையை தயார் செய்து கொண்டிருந்தார். வெகு சமீபத்திலேயே குறுகோட்டில் இராஷ்டிரகூடப் படையை தோற்கடித்து, இராஷ்டிரகூட இளவரசி சங்காவை மணமுடித்து வந்திருந்தார் நந்திவர்மர். எனவே அப்போரில் ஈடுபட்டிருந்த பல்லவப் படையினர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். பல்லவ மன்னர் நந்திவர்மர் நேரடியாக படைகள் பயிற்சி செய்து கொண்டிருந்த திடலுக்கு வந்து, படையினரைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். “கோட்புலியாரே. வீரர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகத் தோன்றுகிறதே…” “ஆம் மன்னா. குறுகோட்டு போர் சமீபத்திலேயே முடிந்துள்ளதால், […]Read More
9. புறப்பட்டது போர்ப்படை! பல்லவ மன்னரின் சமாதானத்தை நிராகரித்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் வெகு சீக்கிரம் தனது படைகளைத் தயார் செய்தார். சோழ மன்னர் குமராங்குசர் காஞ்சி வந்தடைவதற்குள் ஏற்கனவே தயாராக இருந்த பாண்டிய படை, போருக்குத் தயாரானது. அன்று அதிகாலை. ஆதவன் உதிக்கும் முன்னரே படை வீரர்கள் வைகைக் கரையிலிருந்த திடலில் கூடியிருந்தனர். அனைவர் கைகளிலும் வாள், வேல், ஈட்டி, வில், அம்பு ஆகிய ஆயுதங்கள் இருந்தன. அந்தத் திடல் முழுவதும் யானைகளாலும், புரவிகளாலும், […]Read More