7.புத்தன்? வெகுநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. கௌதம் கான்ஸ்டபிள்களிடமிருந்து திமிறிக் கொண்டு அம்மாவின் அருகில் சென்றவன், அவள் உயிர் பறந்துவிட்டது என்பதை உணர்ந்ததும் அவள் காலடியில் அமர்ந்து கண்ணீர் பெருக்கினானே தவிர, ஒரு வார்த்தை சொல்லவில்லை. போஸ் தன்னைத் தாக்கிய அதிர்ச்சிக் கட்டிலிருந்து மெதுவாக வெளிவந்தான். கான்ஸ்டபிள்களை அனுப்பி சாந்தியின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைக்க உத்தரவிட்டான். போலீஸ் யந்திரத்தையும் போன் மூலம் முடுக்கிவிட்டான். கான்ஸ்டபிள்கள் வெளியேறிவிட்டதால் கௌதமின் அருகில் வந்து நின்றுகொண்டவன் சாந்தியின் உடலைப் […]Read More
Tags :க்ரைம் த்ரில்லர்
நான் அயர்ந்து போனேன். எந்தப் பெண்ணைத் தேடி நான் தக்கலை தங்க வயல் முழுக்க, நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருந்தேனோ, அதே பெண் இப்போது கண்ணெதிரே. அவளைக் கண்டால், பொசுக்க வேண்டும். தொட்டால், நெறிக்க வேண்டும் என்ற உணர்வெல்லாம், ஓவர்ஹெட் டாங்க்கின், அடி ஓட்டையைத் திறந்தவுடன் வழியும் நீர்போல, அப்படியே வடிந்து விட்டது. அவள், என்னை ஏமாற்றுபவளாய் இருந்தால் மறுபடியும் இந்த இடத்திற்குத் தேடி வந்திருக்க மாட்டாளே! “வாருங்கள்” என்றேன், “உட்காருங்கள்” என்றேன். அவள் உட்கார முயன்ற […]Read More
வெங்கடாச்சலம் சேரில் சாய்ந்தபடி அமர்ந்து “கேளுங்க” என்றார் அலட்சியமாக… “ஆராதனா கல்யாண மேட்டர் பத்தி உங்க ஒய்ஃப் சொல்லியிருந்தாங்க… உங்க தங்கச்சி பையன் இப்ப என்ன செய்யறார்..?” “அது… நடந்து பல வருஷம் ஆச்சி… இப்ப ஏன் இதெல்லாம் கேட்கறீங்க..?” “பரவாயில்லை, சொல்லுங்க.. சின்ன விஷயங்களும் இந்த கேஸ்ல எங்களுக்கு ரொம்பவே முக்கியம்” “ஆமா… அம்ரிதா அம்ரீஷைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம்பிடிச்சு அந்த கல்யாணத்தை நிறுத்திட்டா.. இதுனால என் தங்கச்சி குடும்பம் ரொம்ப அவமானமா பீல் […]Read More
5. பேசுகிறான்! “எதிராஜு! இனி நீ தப்ப முடியாது. உனக்கு யார் இரண்டு லட்ச ரூபாய்ப் பணம் கொடுத்தது, சொல்லிடு” என்று மிரட்டினான் போஸ். “வந்து… மாசிலாமணி ஐயாதான் கொடுத்தாங்க பொண்ணு கல்யாணத்துக்காக…” “எப்படி… கல்யாணத்துக்காக, கல்யாணம் முடிஞ்ச அப்புறம் கொடுத்தாரா?” என்று கேட்டான் போஸ் லட்டியைச் சுழற்றியவாறே. “இல்லை, முன்னாடியே கொடுத்துட்டாரு” என்ற எதிராஜு, லட்டி சுரீரென்று முதுகில் பட்டதும் துடித்துப் போனான். “மாசிலாமணி அப்படியெல்லாம் தர்மம் பண்றவரே இல்லை. உன்னால் அவருக்கு ஏதேனும் வேலை […]Read More
அடுத்த நாள் காலை. எழுந்தேன். குளித்தேன். சாப்பிட்டேன். நெற்றியில் விபூதி, ப்ளஸ் சந்தனப் பொட்டு சகிதம் அறையிலேயே அடைந்திருந்தேன். நல்ல பிள்ளை தோற்றம். பொழுதைப் போக்கக் கையில் ஒரு நாவல் புத்தகத்தை வைத்திருந்தேன். எந்த ஒரு பெண்ணைப் பார்த்தாலும், அந்தப் பெண், இந்த மாதிரித்தான் என்று அவளுடைய குணாதிசயங்களைக் கணிக்கும் அபார ஆற்றல் எனக்கு உண்டு. அதன்படி அவள் நல்லவள். பிறரை வஞ்சிக்காதவள். நற்குடும்பத்தைச் சார்ந்தவள். பழக இனிமையானவள். சுலபத்தில் ஏமாறுபவள். என் வலையில் சிக்கக் கூடியவள். […]Read More
போலீஸ் ஜீப் ‘மில்லினியம் ஸ்டோன்’ அபார்ட்மெண்டில் நுழைந்தது. அதிலிருந்து அனாமிகா, ரவி மற்றும் அலெக்ஸ் குதித்து இறங்கினர். வெளியே செக்யூரிட்டி சர்வீஸில் இருந்தவரை நோக்கி… “இங்க மேனேஜர் யாருங்க..?” என்றார் ரவி. “நான் தாங்க..” என வந்தவரிடம்… “நேத்து வந்தவங்களை நோட் பண்ண லெட்ஜர் இருக்கா?” “இருக்குங்க..” என லெட்ஜரை கொண்டு வந்தார். அதனைப் பிரித்து நேற்றையப் பக்கங்களை மொபைலில் ஒரு போட்டோ எடுத்துக்கொண்ட அனாமிகா… “அலெக்ஸ், இதில நேத்து வந்தவங்களோட போன் நம்பர்கள்ல தரோவா விசாரிச்சிடுங்க..”. […]Read More
4. எதிராஜு… வாயில்மணி அடிக்கவே, அவசர அவசரமாகத்தான் அருந்திக் கொண்டிருந்தவற்றை உள்ளே மறைவாக வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு செய்துவிட்டுக் கதவைத் திறந்தான் எதிராஜு. “யாரு, தெரிலீங்களே” என்றான். “கௌதமோட ஃப்ரெண்ட் நான்” என்றவாறே உள்ளே நுழைந்தான் தர்மா. “நான் உங்களை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லீங்களே?” என்றான் எதிராஜு சந்தேகமாக. “இதுவரை பார்க்காட்டா என்ன எதிராஜு? இப்போ பாரேன்” என்றவாறே ஸ்வாதீனமாக உள்ளே வந்து அமர்ந்துகொண்டான் தர்மா. சுற்றிலும் பார்த்தான், வீட்டில் விசேஷமாக எதுவுமில்லை. வீடு சுத்தமாகவும் […]Read More
அந்தப் பெண் வெள்ளை நிற ஸாரி அணிந்திருந்தாள். புடவை நெடுக வெளிர் ரோஸில் பூக்கள் சிந்தியிருந்தன. ரோஸ் நிறத்தில் ரவிக்கை. தலையில் ஓர மல்லிகைச் சரம். பின்னப்பட்ட பின்னல், பாம்பு போல் தொங்கிக் கொண்டிருந்தது. என் வரவால் சலனப்பட்டு, அவள் திரும்பிப் பார்த்தபோது, தெரிந்த அவள் முகம், என்னை ஒரு விநாடியில் சொர்க்கத்திற்குக் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டது. ஐந்து விரல்களையும் உபயோகப்படுத்தி, மெல்ல உயர்த்திப் பிடித்துக் கொஞ்சத் தோன்றும் மோவாய். சிவப்பான சின்ன அதரங்கள். நீளமான […]Read More
அம்ரீஷ் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவன், கீழே விழுந்த போனை எடுத்து மறுபடியும் காதில் வைத்து.… “மாமா! எ.. ன்.. ன… மாமா சொல்றீங்க? இப்படி ஒரு குண்டைத் தூக்கி என் தலையில் போடுறீங்க..?” என கதறினான். “ஆமா… மாப்பிள்ளை… எங்களுக்கும் ஒண்ணுமே புரியலை… ஆஸ்பத்திரி வாசல்ல நிக்கறோம்… போஸ்ட்மார்ட்டம் பண்ணப் போறாங்களாம்” என அழுதார். “எ..ப்..ப..டி… மாமா.. என்ன நடந்துச்சி” என்று பதறியவனிடம்.. நடந்ததை ஒன்றுவிடாமல் ஒப்புவித்தார். “ஓ மை காட்..! நான் உடனே கிளம்பி […]Read More
3. வீட்டில்… சிறப்பு உத்தரவின்பேரில் கௌதம் பலத்த காவலோடு மாசிலாமணி வீட்டிற்கே அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்து அவன் அம்மா குமுறி அழுதது பரிதாபமாக இருந்தது. “ஏதாவது ஹோப்ஸ் இருக்கா சார்?” என்று போஸிடம் வந்து கேட்டான் ஒரு இளைஞன். அவன்தான் மாசிலாமணியின் இரண்டாவது மகனாய் இருக்கவேண்டும். போஸ் மௌனமாகத் தன்யாவின் பக்கம் கைகாட்டிவிட்டு ஒதுங்கினான். “மகாவீர், உங்க குடும்பத்தைப் பற்றி ஒரு பிக்சர் கொடுக்க முடியுமா?” என்றாள் தன்யா. “கௌதமைப் பற்றி இதுக்குள்ள உங்களுக்கு எல்லாம் […]Read More