ஆசையின் விலை ஆராதனா | 3 | தனுஜா ஜெயராமன்

 ஆசையின் விலை ஆராதனா | 3 | தனுஜா ஜெயராமன்

ம்ரீஷ் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவன், கீழே விழுந்த போனை எடுத்து மறுபடியும் காதில் வைத்து.… “மாமா! எ.. ன்.. ன… மாமா சொல்றீங்க? இப்படி ஒரு குண்டைத் தூக்கி என் தலையில் போடுறீங்க..?” என கதறினான்.

“ஆமா… மாப்பிள்ளை… எங்களுக்கும் ஒண்ணுமே புரியலை… ஆஸ்பத்திரி வாசல்ல நிக்கறோம்… போஸ்ட்மார்ட்டம் பண்ணப் போறாங்களாம்” என அழுதார்.

“எ..ப்..ப..டி… மாமா.. என்ன நடந்துச்சி” என்று பதறியவனிடம்.. நடந்ததை ஒன்றுவிடாமல் ஒப்புவித்தார்.

“ஓ மை காட்..! நான் உடனே கிளம்பி வர்றேன்… நீங்க ஆத்யாவையும் அத்தையையும் கவனமா பாத்துக்கங்க” எனச் சொல்லி பதறியபடி போனை வைத்தான்.

உடனே பதட்டத்துடன்… லேட்டாப்பை தேடியெடுத்து இந்தியாவிற்கு டிக்கெட்டை போட்டுவிட்டு தலையைப் பிடித்துக்கொண்டு கட்டிலில் சரிந்தான். அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு நாட்களுக்குமுன் சிரித்தபடி ப்ளைட் ஏறியவள் இன்று இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அம்ரிஷால்… யார் இதைச் செய்தது..? ஆராதனாவிற்கு என்ன நடந்திருக்கும்..? என மனதை குடைந்தன கேள்விகள்.

அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் முடிந்திருந்தது.

“என் மருமகன் வந்துகிட்டிருக்காங்க… அவர் வந்ததும் பாடியை எடுத்துக்கறோம்” என அழுகையினூடே சொல்லிக் கொண்டிருந்தார் வெங்கடாச்சலம்.

R1 போலீஸ் ஸ்டேஷன்.

“ரவி… ஆராதனா போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருச்சா..?” என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் அனாமிகா.

“மேடம்.. உங்க டேபிள்ல வைச்சிருக்கேன்”

“ஆமா… அந்த மில்லேனியன் ப்ளாட்ல விசாரிக்க சொன்னேனே.. ஏதாவது உருபடியா தேறுச்சா..?”

“கொலை நடந்தது மத்தியான நேரம்.. யாரும் வெளியே இல்லை.. உருப்படியான தகவல் எதுவும் கெடைக்கலை மேம்”…என்றார் ரவி

“அந்த CCTV புட்டேஜ் கலெக்ட் பண்ணிட்டிங்களா?”

“கலெக்ட் பண்ணிட்டோம் மேம்… அலெக்ஸ், அதை எடுத்திட்டு வாய்யா”…

டேபிளில் அமர்ந்த அனாமிகா போஸ்ட்மார்ட்டம் ஃபைலைப் பிரித்துப் படித்தாள். மதியம் 1.00 லிருந்து 1.30 க்குள் இறந்திருக்கிறாள். இறப்புக்கான காரணம் கை மணிக்கட்டில் அறுபட்டு ரத்தம் வெளியேறி… வேறு ஒன்றும் புதிதான தகவல் இல்லை. “ச்சே!… இது கொலையா..? தற்கொலையா..? இரண்டுக்குமே வாய்ப்பிருக்கு. உனக்கு என்ன தோணுது ரவி..? அலெக்ஸ் உனக்கு ஏதாவது தோணுதா..?”

“ஆராதனாவோட அப்பா வெங்கடாச்சலம் அடிச்சிச் சொல்லுறாரு.… தற்கொலைக்கு வாய்ப்பேயில்லைன்னு” என்று இழுத்தார் ரவி..

“அவ வீட்டுக்காரனும் வெளிநாட்ல இருக்காரு… இங்க வந்தே இரண்டு நாள் தான் ஆகுது.. இந்தியாவில் இருந்து அவ போய் எழு எட்டு வருஷமாச்சு… அப்படியிருக்க, அந்த பொண்ணுக்கு யார் எதிரிங்க இருக்கமுடியும் மேம்..? கொலைக்கு என்ன மோட்டிவ் இருக்க முடியும்..?” -சந்தேகம் கிளப்பினான் அலெக்ஸ்.

“கரெக்ட்தான்… அது கொலையோ, தற்கொலையோ… நாமதான விசாரிக்கணும். இப்பத்திக்கு எந்த க்ளுவும் கெடைக்கலை… நம்மள நல்லாச் சுத்தல்ல விடப்போகுது இந்த கேஸூன்னு தோணுது” என்று அங்கலாய்த்தாள் அனாமிகா.

“நீங்க இதைவிடக் கஷ்டமான பல கேஸ்களைல்லாம் சுலபமாக் கண்டு பிடிச்சிருக்கீங்க. இதை ‘ப்பூ’ன்னு ஊதித் தள்ளிட மாட்டீங்க..?” என்று கோரஸாகச் சிரித்தனர் அலெக்ஸூம் ரவியும்.

“ம்க்கும்… காலையிலேயே கமிஷனர் வேற போன் பண்ணிட்டார். சீக்கிரம் கண்டுபிடிக்கணுமாம். அந்த வெங்கடாச்சலம் கமிஷனருக்கு ரொம்பவும் வேண்டபட்ட ஆளாம்ய்யா. தலைவலிதான். எனிவே, நம்ம கடமையைச் செய்வோம்”

“மொதல்ல.… ஆராதனா வீட்டுக்கு போவோம். அங்கிருந்து பிள்ளையார் சுழியைப் போடுவோம்… எதாச்சும் மாட்டும். ஆமா ஆராதனா ஹஸ்பெண்ட் வந்துட்டார்ல்ல..?”

“வந்துட்டாராம்.”

“சரி… அந்த ஆளையும் தரோவா விசாரிச்சுடுவோம்”.

ராதனாவின் வீடு களையிழந்து போயிருந்தது. வெளியே குழந்தை ஆத்யா மற்ற ப்ளாட் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். பார்க்கவே பாவமாக இருந்தது. அம்மா இல்லாமல் இச்சிறுவயதில் ரொம்ப கஷ்டம் தான்… என்று தோன்றியதை ஒதுக்கி உள்ளே நுழைந்தனர்.

சோபாவில் களையிழந்த முகத்துடன்… வெங்கடாசலம் அருகில்… அம்ரிஷாக இருக்கலாம்… அமர்ந்திருந்தனர்.

“இவங்க தான் அனாமிகா… ஆராதனா கேஸை டீல் பண்றாங்க…” என்று அம்ரீஷிடம் அறிமுகப்படுத்தினார் வெங்கடாச்சலம்.

“மிஸ்டர் அம்ரீஷ்! ஆராதனாவிற்கு யாராவது எதிரிங்க இருக்காங்களா..? உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா..?”

“அவளுக்கு எதிரியா? ச்சேச்சே ஆராதனா ரொம்ப சாப்ட்… அதிகமா அதிர்ந்து கூட பேசமாட்டா”

“அப்ப… வேற ஏதாவது..? ஐ மீன்…”

“ஓ ந்நோ அனாமிகா.… அம்ரிதா அப்படிபட்ட பொண்ணு இல்லை… நீங்க தப்பாக் கேக்கறீங்க”…

“சாரி சார்… இது எங்க ட்யூட்டி… எல்லாக் கோணத்திலும் விசாரிக்கணும்… இல்லையா..?”

அமைதியாக நின்றவனிடம்… “ஆமா! நீங்க எவ்ளோ நாள் இந்தியாவில் இருப்பீங்க..?”

“நெக்ஸ்ட் வீக் கிளம்பியாகணும்… போட்டது போட்டபடி வந்துட்டேன்”..

“ஓ… உங்க மக ஆத்யாவையும் கூட்டிட்டுப் போகப் போறீங்களா?”

“இல்லை… இங்க கொஞ்ச நாள் இருக்கட்டும்ன்னாங்க மாமாவும் அத்தையும்… அடுத்தமுறை கூட்டிட்டு போகலாம்னு”…

“எனிவே… அகெய்ன் சாரி” வழக்கமான சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, “அப்ப நான் கிளம்புறேன்” என்று விடைபெற்றாள் அனாமிகா.

“ஏன் மேடம்.? ஆராதனாவோட பேரன்ட்ஸை விசாரிக்கலையா..?” என்றார் ரவி வெளியே வந்தவுடன்.

“இப்ப வேணாம்… காரணமாத்தான் சொல்றேன்… வெங்கடாச்சலம், விஜயலட்சுமி இவங்களை நாம தனியாக் கூப்ட்டு விசாரிப்போம்”

“அலெக்ஸ்..! நீங்க வெங்கடாச்சலத்தை போன்ல கூப்பிட்டு என்னை நாளைக்கு ஸ்டேஷன்ல வந்து பாக்கச் சொல்லுங்க. கொஞ்சம் தகவல் தேவைன்னு சொல்லுங்க..”

“அந்த CCTV ஃபுட்டேஜ் வேற பார்க்கணுமே மேம்…”

“ஆமா ரவி.. அதுல ஏதாவது நமக்கு தகவல் கிடைக்கலாம். நாம ஸ்டேஷன் போனதும் முதல் வேலையாப் பார்த்துடலாம்..”

ஸ்டேஷனில் நுழைந்ததும்… சிசிடிவி ஃபுட்டேஜை ஆன் செய்ய… காலை பத்து மணிக்கு ஆராதனாவின் கார் ப்ளாட்டில் நுழைவது தெரிந்தது. அவளது ப்ளாக்கில் கிடைத்த ஃபுட்டேஜையும் பார்க்க… ஸமோட்டா, ஸ்விகி, பிக் பேஸ்கட், அமேசான் ஆட்கள் மட்டும் போவதும் வருவதுமாக இருந்தனர். அதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை.

“அடச்சே..! மறுபடியும் மறுபடியும் இந்த அமேசான், ஸ்விகி ஆட்களே இருக்காங்க… இதுல ஒண்ணுமேயில்லையே… ஏன் ரவி… உலகத்துல யாருமே சமைக்கறதில்லையா..? வெளிய கடை, கண்ணிக்கு போறதில்லையா..?”

“என்ன பண்றது மேடம்..? இப்பெல்லாம் ரோட்ல கூட இவங்க தான் வண்டியில திரியுறாங்க..? ஜனங்களோட சோம்பேறித்தனம் அதிகமானதுக்கான அறிகுறி. வேறென்ன..? எல்லாம் கலிகாலம்”…என அங்கலாய்த்தார் ரவி.

“செக்யூரிட்டிங்களை விசாரிங்சீங்களா..?”

“கேட்டோம்.… புதுசா வர்றவங்களை நமபர் கேட்டு லெட்ஜரில் எழுதறாங்க… ஆனா ஸ்விக்கி, அமேசான் ஆட்களை அப்படியேதான் உள்ளே அனுப்பறாங்க”

“ம்க்கும்.. அப்புறம் என்ன செக்யூரிட்டி இருக்கு இதில..?”

“ஆமா… ஆராதனாவோட கார் எங்க நிக்குது?”

“பார்க்கிங்லயேதான் இருக்கு மேம்.”

“ஆராதனாகூட ஸ்விக்கில ஏதோ ஆர்டர் பண்ணியிருந்தாங்க இல்ல..?”

“ஆமா… மேம்.. பிரிக்காமலே டைனிங் டேபிள்ல இருந்தது”

“ஆராதனாவோட போன் எங்க இருக்கு..?”

“நம்மகிட்டதான் மேம்… கலெக்டிங் லிஸ்ட்டில் இருக்குற பொருளோட சேத்து பீரோவில் இருக்கு.”

“அந்த மொபைலைக் கொண்டு வாங்க அலெக்ஸ்..! ரவி, நாம நாளைக்கு மில்லேனியன் ஸ்டோன் போய் இன்னும் கொஞ்சம் தரோவா விசாரிக்கணும். அப்படியே ஆராதனாவோட காரையும் பார்க்கணும்”

ஆராதனாவின் ஃபோனை ஆன்செய்தால் அது ஆட்டோமேடிக் லாக் ஆகியிருந்தது.

“ரவி… இதைக் கடையில் கொடுத்து லாக் ஓபன் பண்ணுங்க… நமக்கு இதில் இருக்குற கான்டக்ட்ஸ், மெசேஜ் நம்பர்ஸ் வேணும்..” என்றாள்.

நாளைக்கு மில்லினியம் ஸ்டோனில் ஏதாவது உபயோகமான தகவல் கிடைத்தால் மட்டுமே கேஸ் கொஞ்சமாவது நகரும் என்று தோன்றியது அனாமிகாவிற்கு. ‘பார்க்கலாம்…’ என்று பெருமூச்சு விட்டபடி வீட்டிற்குக் கிளம்பினாள் அனாமிகா.

–அனாமிகா வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...