-அமானுஷ்ய தொடர்- நாக தோஷம் நீங்க போகர் பிரான் கூறிய பரிகாரத்தை காண்போம்.’நாக சதுர்த்தி திதி’ அன்று,ஒரு அரச மரத்திற்கு அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன்மேல் சிவலிங்கம் ஏந்திய நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம். பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும்,நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார். […]Read More
Tags :ஆன்மீக மர்மத் தொடர்
40. உயரே உயரே… என் உயிரே உயிரே..! மலைச்சரிவில் இருந்த போகர் பள்ளியினுள் நுழையும் வரையில், மயூரி தனது கண்களைத் திறக்கவில்லை. மறந்து போய்க் கீழே நோக்கினால், அச்சத்தினாலேயே தான் தொற்றிக்கொண்டிருக்கும் குகன்மணியின் தோளில் இருந்து நழுவி விடுவோம் என்கிற எண்ணத்தில், அவனது தோளில் புதைந்திருந்த தனது முகத்தை அவள் உயர்த்தவேயில்லை. அவன் பத்திரமாக தன்னைக் கொண்டு சேர்ப்பான் என்கிற நம்பிக்கையுடன், தான் வழிபடும் முருகன் தன்னைக் கைவிட மாட்டான் என்று உறுதியாக நம்பினாள். மலைச்சரிவில் அந்த […]Read More
39. போகர் பள்ளி..! போகர் சாலை ! தற்போது இந்த பகுதியின் பெயர் போன்சாய் ! குனோங் தஹான் மலைப்பாதையில் ஆறாவதாக வரும் பகுதி.. காலை பொழுதில் கதிரவன் வானத்தில் ஏறுமுகமாக இருந்தாலும், அவனது கிரணங்கள் க உள்ளே புகாதபடி அடர்ந்த மரங்கள் பந்தல் அமைந்திருந்தன. இதனால் பகல் வேளையிலும் அங்கே இருள் பரவியிருக்க, ‘ங்கோயிங் ‘ என்கிற காட்டு பூச்சிகளின் இரைச்சல் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பறவைகளும் அவ்வப்போது கூவி, அதை பகல் பொழுது என்று […]Read More
38. தகான் மலை உச்சியில்..! பகாங் மாகாணத்தில் டாமன் நெகாரா தேசியப் பூங்கா ! Steep Slopes resort-இல் தான் மிதுன்ரெட்டிக்கும், கனிஷ்காவுக்கும் காட்டேஜ் ஒதுக்கப்பட்டிருந்தது. மலைச்சரிவில் ஆங்காங்கே அமைக்கபட்டிருந்தன காட்டேஜ்கள். இரவு வந்ததும், காட்டேஜ்களில் பொருத்தப்பட்டிருந்த லாண்டர்ன்கள் இருள் சூழ்ந்த மலைச்சரிவுகளில், சிதறியிருந்த விளக்குகள் பொருத்தப்பட்ட காட்ஜெகள், மலைமகள் அணிந்திருந்த ஹாரம் போல மின்ன, அதை ஜன்னல் வழியாக ரசித்தபடி நீண்டிருந்தான் மிதுன். அவன் அருகில் நின்றிருந்த கனிஷ்கா, அந்தக் காட்சிகளை ரசிக்கும் மனநிலையில் இல்லை. […]Read More
37. வாராய் நீ வாராய் மூன்றாவது நவபாஷாணச் சிலையை குகன்மணிதான் தனது பொறுப்பில் வைத்திருக்கிறான். குனுங் தகான் மலைக்கு மயூரியை அழைத்துச்சென்று அவளுக்கு அந்த சிலையைக் காட்ட போகிறான் ? எதற்காக அவள் மீது அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறான்..? காரணம், அவனது இதயத்தில் அவள் மீது நாட்டம் கொண்டிருக்கிறான். மலேசியாவின் சைனா டவுன் பகுதியில் இவ்வளவு பெரிய எஸ்டேட்டின் உரிமையாளர், எதற்காக மயூரியை பிடித்துக் கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறான்..? அவளைவிட, கவர்ச்சியும், புகழையும் கொண்டிருக்கும் இவளைத்தானே நாட […]Read More
36. ரகசியம் தெரிந்தது! பத்து எஸ்டேட்டின் அடர்ந்த மரங்களை ஊடுருவி அதன் நிலப்பகுதியில் தனது ஆளுமையைச் செய்ய இயலாத காலைக் கதிரவன், கோபத்தில், அந்தப் பிரம்மாண்ட மாளிகையின் மொட்டை மாடியைத் தகித்துக் கொண்டிருந்தான். ஆனால் சுள்ளென்று அடித்த அந்த வெய்யிலை இலட்சியம் செய்யாமல், குகன் மணி சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தான். இடுப்பில் கரிய நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்தான். மற்றபடி, அவனது தேகம் ஒரு மலைக்குன்றைப் போன்று வெயிலில் சுழன்றாட, அதன் உச்சியில் இருந்து பாயும் அருவிகளைப் போன்று, […]Read More
-அமானுஷ்ய தொடர்- சித்தர் என்ற வார்த்தையின் பொருள் ‘விஞ்ஞானி’ ஆகும்.சித்தர்களை மக்கள் ஜாலங்கள் செய்யும் மாயாவிகளாகவே பார்க்கின்றனர்.சித்தர்கள் மக்களோடு மக்களாக ஸ்தூல தேகத்தோடு வாழும் காலத்தில்,போராசை கொண்ட மனிதர்கள் பலர் சித்தர்களை தங்களின் வறுமையை போக்கவும் மற்றும் தங்களின் நோயை குணப்படுத்தவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர்.அதில் தவறும் இல்லை.ஆனால்,யாரும் இந்த மாய வாழ்க்கையை வென்று முக்தி அடையும் நோக்கத்தோடு சித்தர்களை அணுகவில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.எனவே,சித்தர்கள் தனிமையை நாடி கானகங்களையும் மலைகளையும் தஞ்சம் புகுந்தனர்.சித்தர்களில் ‘போகர்’ […]Read More
35. இக்கரைக்கு அக்கரை பச்சை குகன் மணி எஸ்டேட் போர்டிகோவில் கேப் வந்து நிற்க, கனிஷ்காவுடன் இறங்கினாள், மயூரி ! சைனா டவுன் மலைச் சாலையில் இருந்து, பத்து எஸ்டேட் Batu Estate, என்று தமிழிலும், ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும், சீன மொழியிலும் வடிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையைத் தாங்கி நின்ற அந்த நுழை வளையத்தினுள் நுழைந்து பாதையில் வண்டி இறங்க தொடங்கியதுமே, கனிஷ்காவின் புருவங்கள் உயர்ந்தன. “பியூட்டிபுல்..! எவ்வளவு அழகா இருக்கு..!” —என்று வழியெங்கிலும், செயற்கை அருவிகள், குளங்கள், […]Read More
-அமானுஷ்ய தொடர்- பாம்புகளில் நாக வழிபாடு உலகம் முழுவதும் பரவியிருந்தது.தமிழகத்தில் கொங்கு நாட்டுப்புறப் பகுதிகளில் நாக வழிபாடு தொன்றுத்தொட்டே சிறப்பு பெற்றிருந்தது. அப்பகுதிகளில் வாழ்ந்த வேட்டுவர் இனத்தவர்கள் நாக வழிபாட்டினை போற்றி பாதுகாத்தனர்.கோயில்களில் நாகர்களுக்கு சிலை வடித்து பூஜித்து வந்தனர். அதுமட்டுமின்றி, சில கிராமங்களில் இன்றளவும் புற்றுக்கோயில்கள் மூலம் நாக வழிபாடு பொலிவு குறையாமல் நடைபெற்று வருகிறது.திருச்செங்கோடு புராணங்களில் ‘நாக மலை’ என்று வழங்கப்படுகிறது. திருச்செங்கோடு மலை கோயிலில் சுமார் 60 அடி நீளத்திற்கு ஒரு ராட்சச […]Read More
34. ஆபத்துக்கு அடைக்கலம் கோலாலம்பூர் மில்லினியம் ஹோட்டலினுள் நுழைந்து, பார்க்கிங் ஏரியாவில் நின்ற கேப்-பில் இருந்து இறங்கிய மயூரி, ரிசப்ஷனுக்கு விரைந்தாள். சோபா ஒன்றில் அமர்ந்தபடி அவளுக்காகக் காத்திருந்தாள், கனிஷ்கா. “ஹாய் மயூரி..!” –என்றபடி எழுந்து நின்ற கனிஷ்கா அவளைத் தாவி அணைத்துக்கொண்டு முகத்தை அவளது தோளினில் புதைத்துக் கொண்டாள். மயூரியின் தோள்கள் தாமரையைப் போன்று விரிந்து, விலாப் பகுதியில் குறுகி, மீண்டும் இடையில் சற்றே விரிந்து, பாதங்களை நோக்கி மீண்டும் குறுகி, வளைவு நெளிவுகளோடு காணப்படும். […]Read More