ஒரே நாளில் குறைந்த காய்கறிகளின் விலை..!

 ஒரே நாளில் குறைந்த காய்கறிகளின் விலை..!

கோயம்பேட்டில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் 400 ரூபாய்க்கு விற்ற நிலையில், ஒரே நாளில் 100 ரூபாய் சரிந்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் மழையின் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்த நிலையில், தற்பொழுது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது. அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவிற்கு 10 முதல் 100 ரூபாய் குறைந்துள்ளது.

தக்காளியின் விலை நேற்று 50 முதல் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று 20 முதல் 30 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த முருங்கைக்காயின் விலை, வரத்து அதிகரித்ததன் காரணமாக இன்று ஒரே நாளில் 100 ரூபாய் குறைந்துள்ளது. மேலும் உச்சத்தில் இருந்த பூண்டின் விலையும் இன்று கிலோ 50 ரூபாய் குறைந்து
400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடத்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த காய்கறிகளின் விலை தற்போது குறைய தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஒரே நாளில் காய்கறிகளின் விலை குறைந்ததால், விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...