அன்றும்… இன்றும் 13.02.2020

 அன்றும்… இன்றும் 13.02.2020
உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். “நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர்.
நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல்,  ஸ்மார்ட்போன், ஐ.பேட் இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், MASS MEDIA முன்னோடி வானொலி தான்.

முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பிப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். 
யுனெசுக்கோ அமைப்பின் யோசனைப்படி, 2014ஆம் ஆண்டுக்கான உலக வானொலி நாளின் தொனிப்பொருளாக பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வானொலி மூலம் வலுவூட்டுவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...