நாளை பூமியை கடந்து செல்லும் குறுங்கோள்
நாளை பூமியை கடந்து செல்லும் குறுங்கோளால் பாதிப்பில்லை – விஞ்ஞானிகள்
விண்ணில் இருந்து அசுர வேகத்தில் வரும் குறுங்கோள் ஒன்று நாளை பூமியைக் கடந்து செல்ல உள்ளது.
அந்தக் குறுங்கோள் மணிக்கு 54 ஆயிரத்து 717 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அந்த குறுங்கோள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அந்தக் கோள் நாளை பூமியை கடந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பூமியிலிருந்து சுமார் 58 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் செல்லும் அந்த குறுங்கோளை அதிநவீன தொலை நோக்கி மூலமே காணமுடியும் என்று நாசா கூறியுள்ளது. கோள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசையால் அவை ஒன்றோடொன்று மோதி அழிவுக்கு ஆளாகின்றன. ஆனால் பூமியிலிருந்து வெகு தொலைவில் அந்த குறுங்கோள் செல்வதால், பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.