Ajith அஜித் படம்னா ‘அந்த’ கதாபாத்திரத்தில் கூட நடிக்க ரெடி:

 Ajith அஜித் படம்னா ‘அந்த’ கதாபாத்திரத்தில் கூட நடிக்க ரெடி:

அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்  விஜய் சேதுபதி…….!

   

  என் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. கஷ்டப்பட்டு பட வாய்ப்புகளை பெற்று ஹீரோக்களுக்கு பின்னால் ஒரு ஓரமாக நின்று அதன் பிறகு ஒரு வழியாக ஹீரோ ஆனவர் விஜய் சேதுபதி. அப்படி கஷ்டப்பட்டு ஹீரோ ஆனவர் யாருமே எதிர்பார்க்காத விஷயங்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஹீரோ மட்டும் அல்ல எந்த கதாபாத்திரமானாலும் பிடித்திருந்தால் பந்தாவே பண்ணாமல் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

    தானே பெரிய ஹீரோ, அப்படி இருக்கும் நிலையில் மற்ற ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர வேடம், ஏன் வில்லன் கதாபாத்திரத்தில் கூட நடிக்க தயங்குவது இல்லை இந்த விஜய் சேதுபதி. இந்நிலையில் தான் அவருக்கு அஜித் படத்தில் நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஓ மை கடவுளே படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது. படத்தின் ஹீரோ அவர் இல்லை அசோக் செல்வன். ஓ மை கடவுளே பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில், அஜித்துக்கு வில்லனாக நடிப்பீர்களா என்று விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, அஜித் சார் படத்தில் நடிக்க பல காலமாக காத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். அது வில்லனாக இருந்தாலும் சரி, குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என்று தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் ஆசையை எந்த இயக்குநர் நிறைவேற்றி வைக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...