காதலில் அனுஷ்கா, விரைவில் திருமணம்?:

 காதலில் அனுஷ்கா, விரைவில் திருமணம்?:

அனுஷ்கா ஒருவரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

   நடிகை அனுஷ்காவுக்கு 38 வயதாகிவிட்டது. அவருக்கு விரைவில் திருமணம்  செய்து வைக்க பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். இதையடுத்து அவர்கள் கோவில், கோவிலாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அனுஷ்கா  கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

   அந்த வீரர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றும், ரஞ்சி அணியில் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. அனுஷ்கா அந்த கிரிக்கெட் வீரரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதை சம்பந்தப்பட்டவர் உறுதி செய்யவில்லை

   முன்னதாக பாகுபலி படத்தில் நடித்தபோது அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. அதை அனுஷ்கா உறுதியும் செய்யவில்லை, மறுக்கவும் இல்லை. பிரபாஸ்  தான் அனுஷ்கா குடும்ப நண்பர் மட்டுமே என்று அடிக்கடி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.


    அனுஷ்கா ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்யப் போவதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் அவர் பெயர் கிரிக்கெட் வீரருடன் சேர்ந்து அடிபடுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

   அனுஷ்கா பிரபாஸை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். இதற்கிடையே இந்த ஆண்டே பிரபாஸுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...