இன்றைய முக்கிய செய்திகள்

 இன்றைய முக்கிய செய்திகள்

சென்னையில் மட்டும் தேர்வு கால்நடைத்துறையில் 1141 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 7 மையங்களில், 6 மையங்களை ரத்து செய்து உத்தரவு-சென்னையில் மட்டும் தேர்வு நடக்கும் என அறிவிப்பு.

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது-வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு. ஆளுநருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது-வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு  தள்ளி வைப்பு. தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்கள் அல்ல.

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி.ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது நியூசிலாந்து அணி.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.30,952க்கு விற்பனையாகிறது.

டெல்லி சட்டப் பேரவை தேர்தல் –  ஆம் ஆத்மி 3வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு.ஆம்ஆத்மி 53, பா.ஜ., 16 தொகுதிகளில் முன்னிலை, கட்சி அலுவலகத்திற்கு வருகிறார் கெஜ்ரிவால்.ஆம் ஆத்மி தொண்டர்கள், கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.க.-வுக்கு சென்ற கபில் மிஸ்ரா, காங்கிரசுக்கு இடம்பெயர்ந்த அல்கா லம்பா பின்னடைவு.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக, திருவள்ளூர் அருகே அத்தங்கிகாவனூர் கிராம நிர்வாக அலுவலர் சுயம்புராஜன் கைது – சிபிசிஐடி

பிப். 24, 25ல்
இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னையில் பெட்ரோல்
விலை 17 காசுகள் குறைந்து ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலை 22 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.50ஆகவும் உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...