சென்னை_புத்தகக்கண்காட்சி_2024_25
சென்னை_புத்தகக்கண்காட்சி_2024_25
வெகுஜன நாவல்கள் குறித்த ஆரம்பக்கட்ட சர்வே ஆச்சர்யமளிக்கிறது.
- ‘அருணோதயம் பதிப்பகம்’ 100 நூல்களை வெளியிடுகிறது. இதில் 95% நாவல்கள். அதுவும் பெண் எழுத்தாளர்களின் புதினங்கள். எல்லாமே நேரடியாக வருபவை அல்லது ஆன்லைனில் வெளியானவை.
- ‘அருண் பதிப்பகம்’ 30 + புதினங்களை வெளியிடுகிறது. 99% பெண் எழுத்தாளர்கள். இவையும் நேரடியாக வருபவை அல்லது ஆன்லைனில் வெளியானவை.
- மல்லிகா மணிவண்ணன், ஜானகி நவீன், எம்.எஸ்., ஆத்விகா பொம்மு… உள்ளிட்ட சொந்தப் பதிப்பகம் வைத்திருக்கும் சில பெண் எழுத்தாளர்கள் தலா 5 முதல் 15 நாவல்கள் வரை கொண்டு வருகிறார்கள். இவற்றில் இவர்கள் எழுதியது தவிர மற்ற பெண் எழுத்தாளர்களின் புதினங்களும் அடங்கும்.
கரெக்ட். இந்த நாவல்களில் ஒன்று கூட பத்திரிகைகளில் வரவில்லை. - இதுவரை குறிப்பிட்ட 3 கேட்டகிரியும் ‘ரமணி சந்திரன்’ ஸ்கூல் ஆஃப் தாட் என்பது ஹைலைட்.
- ‘வானதி பதிப்பகம்’ 50 + நாவல்களை கொண்டு வருகிறது. இதில் 45 + வரலாற்று நாவல்கள். கணிசமான பெண் எழுத்தாளர்கள் சரித்திர நாவலாசிரியைகளாக களத்தில் குதிக்கிறார்கள்.
ஆமாம்… ‘காலச்சக்கரம் நரசிம்மா’ வின் ஒன்றிரண்டு புதினம் தவிர மற்றவை அனைத்தும் நேரடி நாவல்கள். - ‘கெளரா பதிப்பகம்’ 10 + வரலாற்று புதினங்களையும், 10 + மற்ற ஜானர் நாவல்களையும் வெளியிடுகிறது.
யெஸ்… யெஸ்… அனைத்துமே பத்திரிகைகளில் பிரசுரமாகாத நேரடி புதினங்கள்.
பத்திரிகைகளை நம்பாமல் ஆன்ராய்ட் போன் / லேப்டாப்பை மட்டுமே நம்பும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் – முக்கியமாக பெண் படைப்பாளிகளுக்கு – மனமார்ந்த வாழ்த்துகள். கலக்குங்க. தொடர்ந்து எழுதுங்க (y) ❤
(புத்தக கண்காட்சியை ஒட்டிய வெகுஜன நாவல்களின் சர்வே தொடரும்)
✍️@சிவராமன். Editor. குங்குமம்