ஆஸ்கார் வைல்ட் நினைவு நாளின்று😢

ஆஸ்கார் வைல்ட் நினைவு நாளின்று😢

ஐரிஷ் எழுத்தாளரான ஆஸ்கார் வைல்டு. எழுத்துப்பணியில் மட்டுமின்றி நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் புகழ் பெற்றவர்.பல சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ள ஆஸ்கார் வைல்டு, தனது நகைச்சுவை வாய்ந்த படைப்புகளின் மூலம் பிரபலமானவர்.

இங்கிலாந்தின் மிகச்சிறந்த நாடக ஆசிரியராகவும், புகழ்பெற்ற மனிதர்களில் ஒருவராகவும் விளங்கினார். இவரால் உருவாக்கப்பட்ட சில நாடகங்கள் இன்றும் அரங்கேற்றம் கண்டு வருவது இவரது பெருமையை நமக்கு உணர்த்துகின்றது.

இவரின் பொன்மொழிகளில் சில

$ வாழ்க்கையில் இரண்டே துயரங்கள்தான்; ஒன்று, ஒருவருக்கு என்ன தேவைப்படுகிறதோ அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை மற்றொன்று ஒருவருக்கு எது தேவையில்லையோ அது அவர்களுக்குக் கிடைக்கின்றது.

$ வானிலை பற்றிய உரையாடல் என்பது கற்பனை செய்யமுடியாத நிலையின் கடைசிப் புகலிடம்.

$ எந்த மனிதனும் தனது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவிற்கு பணக்காரனாக இல்லை.

$ நாம் அனைவருமே பள்ளத்தில்தான் இருக்கிறோம், ஆனால் நம்மில் சிலரே நட்சத்திரங்களைப் பார்க்கிறார்கள்.

$ வெற்றி என்பது ஒரு அறிவியல்; அதற்கான நிபந்தனைகள் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

$ உங்கள் இதயத்தில் அன்பை வைத்துக்கொள்ளுங்கள்; அன்பு இல்லாத வாழ்க்கை, சூரிய ஒளியற்ற, இறந்த மலர்களைக் கொண்ட தோட்டத்தைப் போன்றது.

$ நமது செயல்களில் நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுத்துள்ள பெயரே அனுபவம் என்பதாகும்.

$ ஒரு மனிதன் தனது எதிரிகளைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க முடியாது.

$ பெண்களைப் படைத்ததன் நோக்கம், அவர்களின் மீது அன்பு செலுத்துவதற்காகவே தவிர அவர்களை புரிந்துகொள்வதற்காக அல்ல.

$ சிறிய அளவிலான நேர்மை ஒரு ஆபத்தான விஷயம் பெரிய அளவிலான நேர்மை முற்றிலும் ஆபத்தான விஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!