இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் இன்று!💐

 இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் இன்று!💐

இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் இன்று!💐

ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தில் பிறந்த ‘போஸ்’ விஞ்ஞானி .போஸ் ஆக உதவியது பெரும்பாலும் பிரிட்டிஷார்கள். படிப்பில் இவருக்குள்ள அக்கறையைப் பார்த்து வியந்து அவரை இங்கிலாந்து அனுப்பி அங்கு நாலைந்து பட்ட படிப்புகளை படிக்க உதவி செய்தார்கள்

அப்படி அங்குப் படித்துக் கொண்டிருக்கும் போதே கண்டுப் பிடித்த அரிய டெக்னாலஜிதான் இன்றைய இந்திய ஊழலுக்கு அச்சாரமாகும்! என்ன புரிய வில்லையா?

உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் பலர் மனித இனத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் கண்டு பிடித்த வானொலி,தொலைக்காட்சி, தொலைக் காட்சிக்குத் தேவையான அலைவாங்கி(Antenna), தொலைபேசி, கம்பியில்லாமல் தந்தி அனுப்பும் முறை, விமான நிலையக் கட்டுப்பாடு அறையில் செயற் படுத்தப்படும் ‘ராடார்’ தொழில் நுட்பங்கள் போன்ற அனைத்திற்கும் தேவையான அடிப்படை மின்னோட்ட, ‘மின்னியல்’கண்டுபிடிப்புகளை நம்ம .போஸ் தான் கண்டு பிடித்தார்.

ஆனால் அந்தோ பரிதாபம், இவர் தனது கண்டு பிடிப்புகளை ‘ஏனைய விஞ்ஞானிகள்’ போல் இரகசியமாக வைத்துக் கொள்ளாமல், இங்கிலாந்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் தன்னோடு உடன் படித்த மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிட்டார்.

இவரது கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானி ‘மார்க்கோனி’ வானொலிப் பெட்டியையும்’, கிரஹாம் பெல் தொலைபேசியையும் கண்டுபிடிக்க முடிந்தது.

சாதாரணமாக எமது வீடுகளில் ஒலிக்கும் ‘அழைப்பு மணி’கூட(Calling bell) யாரால் கண்டு பிடிக்கப் பட்டது? என்று வரலாற்றின் பக்கங்களில் தேடினால் ‘ஜோசப் ஹென்றி’ என்ற பெயரே நமக்கு விடையாகக் கிடைக்கும் அவர்தான் இதைக் கண்டு பிடித்தார் என்பது உண்மையே, ஆனால் மிகவும் கடினமான செயற் பாடுகளின் மூலம் இயக்கக் கூடிய அந்தத் தொழில் நுட்பத்தை இலகுபடுத்திய/நவீனப் படுத்திய பெருமை போஸ்ஸையே சாரும்.

இந்த போஸ் கண்டு பிடித்த டெக்னாலஜிபடிதான் இப்போது அலைபேசி கூட சாத்தியமாகி இருக்கிறது. அதாவது இந்த 2ஜி – 3 ஜி- 4ஜி க்கெல்லாம் வித்திட்டவர் போஸ்தானாம்!

இதற்கிடையில் போஸ் தனது கண்டு பிடிப்புகள் எவற்றிற்குமே காப்புரிமை வாங்காமல் இருந்துவிட்டார். இது வரலாற்றில் அவர் விட்ட மாபெரும் தவறு என்று பல அறிவியல் நிபுணர்களாலும் இன்றும் கருதப் படுகிறது.

இத்தகைய விமர்சனங்களுக்கு .போஸ் பதில்தான் என்ன? “நான் எனது கண்டுபிடிப்புகளை மனித இனத்திற்கு நன்மை பயப்பதற்காகவே கண்டுபிடித்தேன், இதன்மூலம் ‘கோடி ரூபாய்கள்’ கிடைக்கும் என எதிர்பார்த்து நான் ஆராய்ச்சிகளில் இறங்கியதில்லை.இந்த மனித இனத்திற்கு எனது கண்டுபிடிப்புகளால் நன்மை கிடைக்குமானால் அதுவே நான் இம்மண்ணில் பிறப்பெடுத்தமைக்கான பயனாகும்” எனக் கூறினாராம். ஹும். இப்படியும் சில மனிதர்!

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...