புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை)✝️
புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை)✝️
இயேசுவின் அப்பேஸ்தலர்களில் ஒருவர். சீமோன் பேதுருவின் சகோதரர். கலிலேயக் கடலில் பிடித்து வாழ்ந்தவர். சமுகத்தில் திறமைசாலியாக நற்சான்றுடன் வாழ்ந்தவர். திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். மீட்பராகி இயேசு கிறிஸ்துவின் போதனையால் அப்போஸ்தலராக மாறியவரே புனித அந்திரேயா.
இவர் கலிலேயாவில் பெத்சாய்தவில் பிறந்தவர். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்தவர். இயேசு திருமுழுக்குப் பெற்ற தருணத்தில் திருமுழுக்கு யோவான் தம்முடன் இருந்த சீடர்களிடம், இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி என்று கூறினார். இதைக்கேட்ட அந்திரேயா இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசு தங்கியிருக்கும் இடம் கேட்டு அவருடன் சென்று தங்கி இயேசுவின் அப்போஸ்தலராக மாறி நெருக்கமான சீடர்களில் ஒருவரானார்.
கிரேக்கர்களுக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்தார். பின்னாளில் இயேசு இறந்து உயிர்த்த பிறகு, யார் யார் எந்தெந்த நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கப்போவது என்று சீட்டுப்போட்டத் தருணத்தில் சித்தியா நாடு அந்திரேயாவுக்கு கிடைத்தது. தூய ஆவியைப் பெற்ற பின் கப்பதோசியா, கலாசியா, பிதீனியா, திராஸ், அக்காயா, பிளாக் கடல் மற்றும் கிரீஸ், துருக்கி ஆகிய இடங்களில் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவித்தார்.
அச்சமயம் அந்திரேயா நோயுற்றோரை நலமாக்கினார். பார்வையற்றவருக்கு பார்வை அளித்தார். பேய்களை ஒட்டினார். பத்தாரஸ் பட்டணத்தில் நற்செய்தி அறிவித்தபோது ஆளுநர் ஏஜெடிஸ் மனைவி மாக்ஸிமில்லாவை இறப்பின் பிடியலிலிருந்து காப்பாற்றினார். மாக்ஸிமில்லா கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார். ஆத்திரம் அடைந்த ஏஜெடிஸ் அந்திரேயாவை கைது செய்து சிறையில் அடைத்தான். கிறிஸ்துவை மறுதலிக்க பலவாறு துன்புறுத்தினான், ஏழு கசையடிகள் கொடுத்தான். அந்திரேயா கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.
இதனால ஆளுநர் ஏஜெடிஸ், அந்திரேயாவை சிலுவையில் அறைய தீர்மானித்தான். அந்திரேயா சிலுவை கண்டதும், “ஒ விலையேறப் பெற்ற சிலுவையே வாழ்க! என் ஆண்டவரது உறுப்புகள் உன்னை ஆபரணங்கள்போல் அலங்கரித்தன. மகிழ்ச்சியுடன் நான் உன்னிடம் வருகிறேன். உன்னை நான் உருக்கமாக அன்பு செய்கிறேன். வாஞ்சையுடன் உன்னை தேடினேன். என்னை உனது கரங்களில் ஏற்றுக்கொள். மனிதரிடையிலிருந்து என்னை எடுத்து என் தலைவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைப்பாயாக. உன்னில் தொங்கி என்னை மீட்டவர் உன் வழியாய் என்னை ஏற்றுக்கொள்வாராக” என்று கூறினார்.
இதைக்கேட்ட ஆளுநர் கோபம் கொண்டு எக்ஸ் வடிவில் சிலுவையில் அறைந்து கொன்றான்.
இதே, நவம்பர் 30 அன்று இறந்தார்