பாலியல் ஆசைக்காக பெண்களுக்கு மின்சாரம் பாய்ச்சிய போலி மருத்துவர் மற்றும் பிற செய்திகள். ஜெர்மனியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மின்சாரம் செலுத்த மருத்துவராக நடித்த நபருக்கு 11 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டேவிட் ஜி என்று பெயர் வெளியிடப்பட்டுள்ள அந்த 30 வயது நபர், அவர் தனது பாலியல் ஆசைக்காக போலியான வலி நிவாரண சோதனைகளில் பெண்கள் ஈடுபட பணம் வழங்கியதாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கொலை செய்ய முயன்றதாக 13 வழக்குகள் டேவிட் ஜி மீது தொடுக்கப்பட்டுள்ளது. ஐ.டி துறையில் பணிபுரியும், ஜெர்மனியின் விர்ச்புக் நகரை சேர்ந்த அந்த நபர், இணையத்தில் தனது போலியான மருத்துவ ஆய்வுக்கு பெண்களை தேடும்போது, மருத்துவர் போல் நடித்துள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்டவர்களில் 13 வயது சிறுமியும் ஒருவர்.
இவரால் பாதிக்கப்பட்டவர்களில் 13 வயது சிறுமியும் ஒருவர்.