தோனிக்கு கல்தா! ஒப்பந்த பட்டியலில் நீக்கம்
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 2019 அக்., முதல் 2020 செப்., வரையிலான சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியானது. கடந்த ஆண்டு ‘ஏ’ பிரிவில் ரூ. 5 கோடி பட்டியலில் இடம் பெற்றிருந்த ‘சீனியர்’ தோனி, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 2019, உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பின், எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார் தோனி.
சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், விண்டீஸ் மற்றும் தற்போது நடக்கும் ஆஸ்திரேலிய தொடரிலும் தோனி விளையாடவில்லை. எதிர்கால திட்டம் குறித்தும் எதுவும் தெரிவிக்கவில்லை. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மட்டும், ‘தோனி ஒருநாள் அரங்கில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார். வரும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவதற்கு ஏற்ப, வரும் ‘டுவென்டி-20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது,’ என தெரிவித்து வந்தார். இதேபோல ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு, தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
புதிய பட்டியல் விவரம்:-
‘கிரேடு ஏ+’ (ரூ. 7 கோடி): கோஹ்லி, ரோகித் சர்மா, பும்ரா
‘கிரேடு ஏ’ (ரூ. 5 கோடி): அஷ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், புஜாரா, ரகானே, லோகேஷ் ராகுல், தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷாப் பன்ட்.
‘கிரேடு பி’ (ரூ. 3 கோடி): சகா, உமேஷ் யாதவ், சகால், ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால்.
‘கிரேடு சி’ (ரூ.1 கோடி): கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சகார், மணிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர்.