வரகு – தினை – புதினா தோசை
தேவையானவை:
வரகு அரிசி, இட்லி அரிசி – தலா 100 கிராம்
தினை, உளுந்து – தலா 50 கிராம்
சிவப்பு அவல் – அரை கிலோ
வெந்தயம் – 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
புதினா தொக்குக்கு:
புதினா – அரை கட்டு
சீரகம், கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – அரை கப்
காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வரகு அரிசி, இட்லி அரிசி, தினையை 8 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் ஊறவைத்து, ஒன்றாக சேர்த்து அரைத்து, உப்பு சேர்க்கவும். சிவப்பு அவலை பத்து நிமிடம் ஊற வைத்து கையால் மசித்து மாவில் சேர்க்கவும். சிறிது நேரம் புளிக்க வைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசையாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு புதினா தொக்குக்கு கொடுத்தவற்றை (உப்பு நீங்கலாக) சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் மையாக அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும்.இந்த தொக்கை தோசை மீது தேய்த்து, தோசையைச் சுருட்டி சூடாகப் பரிமாறவும்.