போகி கொண்டாட்டம்:
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு -மாசு கட்டுப்பாடு வாரியம்…….
போகி கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் பல இடங்களில் பழைய பொருட்களுடன் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்ததால் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன.14) அதிகாலை முதல் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
பொங்கலை வரவேற்கும் விதமாக, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பழையன கழிதலும், புதியன புகுதலுமாக வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக போகிப்பண்டிகையை கொண்டாடினர்.
எரிக்கப்பட்ட பழைய பொருட்களில் இருந்து மிகுந்த ரசாயன வாயு அதிலிருந்து வெளியேனது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் கடும் புகை மூட்டம் காணப்பட்டது. புகை மூட்டம் காரணமாக விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
போகிப்பண்டிகையை முன்னிட்டு சென்னையில்15 இடங்களில் காற்று தரசோதனை கருவிகளை மாசுக் கட்டுப்பாடு வாரியம் அமைத்திருந்தது.
இந்நிலையில், போகியையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
50 முதல் 100 குறியீடுக்குள் இருந்தால் மட்டும் அது சுவாசிக்க ஏதுவான காற்றாக இருக்கும் என்ற நிலையில், சென்னை மணலியில் 795 குறியீடுகளாகவும், அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 272 ஆகவும், ஆலந்தூரில் 161 ஆகவும் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக வேளச்சேரியில் 100 ஆகவும் காற்று மாசு பதிவாகியுள்ளது.
காற்று மாசுவை தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், காகிதம், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்திருந்தது நிலையிலும், போகிப்பண்டிகைக்காக எரிக்கப்பட்ட பொருட்களால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.