உருவானது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
அரபிக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது.இந்நிலையில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது இன்று லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து வட மேற்கு நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த மூன்று நாட்களில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தகவலை தெரிவித்துள்ளது.