100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்த ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்..!

 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்த ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்..!

‘ராயன்’ திரைப்படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்தது.

கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் கடந்த 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த படங்களிலேயே இதுவே பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது. இந்நிலையில் ராயன் படத்தின் ஆக்ஸ்ட் 30ம்தேதி ஓடிடியில் வெளியானது. இந்நிலையில், ‘ராயன்’ திரைப்படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்தது குறிப்பிடதக்கது.

ஏஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பாடல்களில் 10 கோடி பார்வைகளைக் கடந்த பாடல்களில் இதுவும் ஒன்று.இதற்கு முன்பு ஏஆர் ரகுமான் பாடல்களான ”ஆளப் போறான் தமிழன், வெறித்தனம், மல்லிப்பூ வச்சி வச்சி, சிங்கப்பெண்ணே” ஆகிய பாடல்கள் 100 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...