கருப்பட்டி பலன்

 கருப்பட்டி பலன்
தித்திக்கும் இனிப்புச்சுவைக்கு பெயர் பெற்றது கருப்பட்டி. சர்க்கரை மற்றும் பல நோய்களின் பாதிப்புகளில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த மருந்து தான் கருப்பட்டி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.தமிழகத்தில் தயாரிக்கப்படும் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்கு சிறப்பு பெயர் பெற்றதாகும்.

நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி இருக்கும். அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். சுக்குக் கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அதை குடிக்கும் குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.கருப்பட்டியில் சிறுவர்களுக்கு பணியாரம் செய்து கொடுக்கலாம்.

‘சுக்கு’ ‘மிளகு ‘சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். கரும்பு சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.

காபிக்கு சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி கலந்து குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகளும் எந்த உணவிலும் சேர்த்து கொள்ளலாம்.
கருப்பட்டி உடலை குளிர்ச்சியடையச் செய்யும். இதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலை பாழ்படுத்தும் சர்க்கரை அளவை வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியுடன், உளுந்தும் சேர்த்து ‘உளுந்தங்களி’ செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

நார்ச்சத்தும் இதில் அதிகம் உள்ளது. குப்பை மேனி கீரையுடன் கருப்பட்டியை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல், சளித்தொல்லை நீங்கும். 
கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.சர்க்கரைக்கு பதிலாக சரியான விதத்தில் கருப்பட்டியை பயன்படுத்தினாலே தற்போதுள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமல் போகும். பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின் ‘பி’ மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...