இன்றைய முக்கிய செய்திகள்
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெசன்ட் நகரில் கோலம் வரைந்து போராடிய, 6 பெண்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சென்னை தரமணியில் ஆற்றல் சேமிப்புத் தீர்வு மையம் அமைக்கப்படும் – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
ஜார்கண்ட் மாநிலத்தின், 11வது முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன். ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அசோக் கெலாட், பூபேஷ் பாகல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை காவல்துறை உத்தரவு. நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை – சென்னை காவல்துறை.
2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளில் இலவச மடிக்கணினி பெறாத மாணவர்கள் ஜன. 11 தேதிக்குள் உரிய சான்றிதழை தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் – பள்ளிக்கல்வித் துறை.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியிலேயே வங்கி மோசடி 1லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது..
2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட தகுதி பெற்றார் மேரி கோம். 51 கிலோ எடைப் பிரிவில், 23 வயதான நிஹாத் ஸரினை தோற்கடித்தார் 36 வயதான மேரி கோம்.