சுனாமியின் கோரத்த்தாண்டவம் – நினைவலைகள்
சுனாமி நினைவலைகள்: ‘அனைத்தையும் இழந்துவிட்டோம், உயிர் மட்டுமே மிஞ்சியது’
டிசம்பர் 26, 2004. அந்த மறக்க முடியாத ஞாயிற்றுக்கிழமை காலை வரை, அந்த நாள் தன் வாழ்க்கை முழுதும் ஆறாத ரணத்தைத் தரும் நாள் என்று தற்போது 67 வயதாகும் பலராமன் அறிந்திருக்கவில்லை.கடலூர் மாவட்டம் சோனங்குப்பம் மீனாவ கிராமத்தை சேர்த்தவர் பலராமன். சுனாமியால் தனது மனைவி காந்திமதி, மூன்று குழந்தைகள் சுசித்ரா, மஞ்சு, கிஷோர் மற்றும் உடன்பிறந்த சகோதரி மேகலா என தனது குடும்பத்தில் ஐந்து நபர்களை சுனாமியால் பறிகொடுத்தவர் பலராமன்.மகளுக்கு திருமணம் முடித்த கையோடு அவரின் திருமண வரவேற்பு வேலையில் மும்பரமாக இருந்த பலராமன், சுனாமி வருவதற்கு முன்பு காலையில் தனது இரண்டாவது மகள் சோபிலாவை வேலைக்கு விடுவதற்காக கடலூர் நகர பகுதிக்குச் சென்றிருக்கிறார்.