மீண்டும் தள்ளிப்போனது ‘தங்கலான்’ ரிலீஸ்..!

 மீண்டும் தள்ளிப்போனது ‘தங்கலான்’ ரிலீஸ்..!

தமிழ் திரைப்பட உலகில் தான் இயக்குனராக அறிமுகமான படத்திலிருந்து அம்பேத்கர் பெரியார் மற்றும் காரல் மார்க்ஸின் கருத்துக்களை தனது படங்களின் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் பா. ரஞ்சித். குறிப்பாக அம்பேத்கரின் கருத்துக்களையும் அவரது சிந்தனைகளையும் தனது படங்களில் குறியீடாகவும் நேரடி காட்சிகளாகவும் வசனங்களாகவும் பல படங்களில் ரஞ்சித் காட்சிப்படுத்தியுள்ளார். இதற்காகவே தமிழ் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் ரஞ்சித்துக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ரஞ்சித் திரைப்படம் வெளியானாலே பல அரசியல் தளத்தில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் அவரது படத்தை அலசி ஆராய்ந்து விவாதத்திற்கு உட்படுத்துவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

இயக்குநர் வெற்றிமாறன் கூட தமிழ் சினிமாவை பிரிக்க வேண்டும் என்றால் அதனை ரஞ்சித்துக்கு முன் ரஞ்சித்திற்கு பின் என்று பிரிக்கலாம் என பொது மேடைகளில் பேசி உள்ளார். அட்டகத்தி மெட்ராஸ் கபாலி காலா சார்பட்டா பரம்பரை நட்சத்திரம் நகர்கிறது தான் இயக்கிய அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு சமூக கருத்தை மிகவும் அழுத்தம் திருத்தமாக பேசக்கூடிய சமூக சிந்தனை கொண்ட இயக்குநராக வலம் வருகிறார் பா ரஞ்சித்.

திரைப்படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் சமூக சிந்தனை உள்ள நாடகங்கள் சீர்திருத்த சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவது நீலம் பண்பாட்டு மையம் என்ற பண்பாட்டு மையத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு சமூகத்தின் நல்வழிப்படுத்தும் கருத்துக்களை எடுத்துக் கூறுவது என ஒரு முழு நேர இயக்க வாதியாகவே செயல்பட்டு வருகிறார்.இது மட்டும் இல்லாமல் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தனது சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ப்ளூ ஸ்டார், ஜே பேபி உள்ளிட்ட படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசைக்கு இந்த படத்தின் கதை கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்து ஏற்கனவே பல மாதங்கள் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்றது. நாள் படம் படகில் திட்டமிட்டபடி தொடக்கத்தில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் ரிலீஸ் ஆக தயாராக இருந்தாலும் மற்ற பட நிறுவனங்களிடமிருந்து வந்த வேண்டுகோளுக்கினங்க படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதனிடையில் ஜூன் 20ஆம் தேதி கூட படம் வெளியாக வாய்ப்புள்ளது என்ற தகவல் கூட அண்மையில் வெளியாகிறது.

ஆனால் ஜூன் 20 ஆம் தேதியும் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்ற தகவலும் அதன்பின்னர் பரவியது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று படம் ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இந்த தேதியிலாவது படம் ரிலீஸ் ஆகுமா அல்லது இந்த தேதியில் இருந்தும் படம் தள்ளி போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...