உன் ஞாபகங்கள்

 உன் ஞாபகங்கள்

ஒவ்வொரு நட்சத்திரங்களைப்போல்

உன் ஞாபகங்கள் விட்டில் பூச்சியாய்

உடல் முழுக்க முழுக்க எரிந்துக்கொண்டிருக்கிறேன்..

நேற்று செய்த ஒரு வானத்திற்கு

உன் முத்தங்களின்பிரதியை தந்து

மழையை நகலெடுத்தேன் …

குளிர்ந்த நிலவின் வாசனையை

உன் அருகாமை உணர்த்தியதுப்போல

உலர்ந்திருக்கிறேன்..

இறக்கைகள் வெட்டப்பட்டும்

கூண்டுக்குள் அடைப்பதுப்போல

உன் காதலோடும்

நினைவுகளோடும் நான் …

சகுந்தலா ஸ்ரீனிவாசன்✍️

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...