கவினின் ‘மாஸ்க்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..!

 கவினின் ‘மாஸ்க்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..!

சின்னத்திரையில் நடித்துக் கொண்டு இருந்த கவின் தனது அயராத உழைப்பால் இன்றைக்கு வெள்ளித்திரையில் நாயகனாக வலம் வருவது மட்டும் இல்லாமல், ஒரு பிராமிசிங் ஆக்டராக உருவாகியுள்ளார். இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் குறிப்பிட்ட அளவில் இருந்தாலும், தன்னை நம்பி பணம் செலவளிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கையான நடிகராகவும் வலம் வருகின்றார். குறிப்பாக ரசிகர்களுக்கு “அட நம்மள மாதிரியே இருக்கானேப்பா இந்த பையன்” என்ற உணர்வை கவின் கடத்திவிடுகின்றார்.

டாடா படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த கவின் அதை எடுத்து ஸ்டார் படத்தில் நடித்திருந்தார். ஸ்டார் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அந்த படம் கவிஞனின் நடிப்பிற்கு பாராட்டுகளை பெற்று தந்தது. மே மாதம் 10ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இந்த படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெற்றிகரமாக ஓடி, கிட்டத்தட்ட ரூபாய் 25 கோடி வசூல் செய்தது. இதில் தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 20 கோடியும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூபாய் 2.35 கோடியும் வெளிநாடுகளில் ரூபாய் 2.65 கோடியும் வசூல் செய்துள்ளது. இது மட்டும் இல்லாமல் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ஸ்டார் படம் கடந்த 7ஆம் தேதியில் இருந்து ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

இந்நிலையில் ஸ்டார் படத்தை அடுத்து கவின் கமிட் ஆகி உள்ள திரைப்படம் மாஸ்க். காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை ஆகிய படங்களை தயாரித்த இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனம் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கவினின் மாஸ்க் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக விகர்ணன் அசோக் அறிமுகம் ஆகிறார். இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. படப்பிடிப்பு இன்று முதல் அதாவது ஜூன் 12-ம் தேதி முதல் சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டையில் தொடங்கியுள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...