பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள தம்பி படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள தம்பி படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது.
தம்பி படத்தின் டீஸர் வெளியான போது, படம் ரொம்ப சீரியஸ் படமாக உருவாகியுள்ள தோற்றத்தை அளித்தது. ஆனால், தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் படம் பக்கா காமெடி படமாக உருவாகியுள்ளது என்றார். தற்போது டிரைலரை பார்க்கும் போது அந்த எஃபெக்ட் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.
தம்பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் அண்ணன் சூர்யாவின் தலைமையில் அரங்கேறியது. தற்போது தம்பி படத்தின் டிரைலரையும் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், திரையில் கார்த்தி மற்றும் ஜோவின் நடிப்பை காண ஆவலுடன் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
