சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்!

 இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார் ’படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில்  பிரமாண்டமாக நடந்தது. அனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.

இதற்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையே இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் வெகுவாக இருந்து வந்தது. இதில் குஷ்பு மற்றும் மீனாவின் பெயர்கள் அதிகம் அடிப்பட்டன.
Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!