மகேந்திர சிங் தோனி, ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்த சின்னத்திரை நிகழ்ச்சியை விரைவில் தயாரித்து வழங்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல  சாதனைகளை நிகழ்த்தியவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி.  விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையிலும் கூட, ராணுவ வீரர்களுடன் பெருமளவு நேரம் செலவழித்து வந்தார்.  இந்திய ராணுவத்தில் இரண்டு வார காலம் ராணுவ பயிற்சி எடுத்துக்கொண்டார். அவருக்கு சிறுவயது முதலே, ராணுவம், ராணுவ வீரர்கள். அவர்களின் நாட்டுப்பற்று, தியாக உள்ளம் உள்ளிட்டவைகளின் மீது தீராத ஆர்வம் உண்டு.


இதன்காரணமாக, ராணுவ வீரர்களின் வாழ்க்கை, அவர்களின் தியாகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட சின்னத்திரை நிகழ்ச்சியை தோனி எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கி வழங்க திட்டமிட்டுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம், ஸ்டூடியோநெக்ஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து ஈடுபட உள்ளது. தற்போது ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், 2020ம் ஆண்டில் இந்த நிகழ்ச்சி, சோனி டிவியில் ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு நிகழ்ச்சி​யைத் ​தொகுத்து வழங்குவது ​​தோனிக்குப் புதிதும் அல்ல அவர் ஏற்கன​வே  ஹாட்ஸ்டார் சேனலில், Roar of the Lion, featuring Captain Cool himself என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!