காதல் அழகு

காதல் அழகு …

————————–

மனதுக்குள்  இளமை

மகிழ்வு பாட்டு எழுத

மரம் கொத்தியென ,

நினைவுகளை தடயமிடும்

காதல் அழகானது ..

 

ஒன்றரை கண்ணுடன்

ஓரமாக இழுக்கப்பட்ட வாயுடன்

கத்தாழை நார் முடியுடன்

அங்க கேடான காதலியும்

அழகாய்  தெரிவாள் காதலில்    

 

காதலி அழகு அல்ல

காதல் தான்  அழகு

காதலை நேசியுங்கள்

காதலி  எப்போதும்  அழகாவாள்

 

தட்டாம் பூச்சி சிறகுகளை 

தாழ்த்தி  கார் காலத்தில் ,

தரையை  நெருங்கி  பறக்கும்

மழையின் முன் அறிவிப்பாய் ….

 

பூவன மலர்கள்

தனக்கென  நினைத்து

தலையாட்டி மகிழும்

 

காதலும்  இந்த விதியில்தான்

கருத்தரிப்பை செய்கின்றன

மயக்கத்தில் மயங்கி  பாயும் 

மாயமான் துள்ளலாக 

 

இருநிற விழிகள் படபடக்கும்

இமை சிறகுகள்

பாயும் வில்லென இதயத்தை

பரவச ரணபடுத்த

கானல் நீர் விளையாட்டை

கையில் எடுக்கிறது காதல்

 

இருக்கிறதா ,இல்லையா என்ற

இதயத்தின் சதுரங்க ஆட்டத்தில்

காதலின் அழகு கூடுகிறது

காதலி தேவதையாய் மாறுகிறாள்

 

காதல் இருக்குமவரை

யூகம் பெண்களுடையது

காதல் போயின்

பெண்கள் சாதலே மேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!