வருவாய் பிரிவு வீடுகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை மகாகவி பாரதியார் நகரில், ரூ.129 கோடி மதிப்பிலான 510 குறைந்த வருவாய் பிரிவு வீடுகளை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை முகப்பேரில் உயர் வருவாய் பிரிவினருக்கான ரூ.12 கோடி மதிப்பிலான 40 வீடுகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மதுரை அண்ணாநகரில் ரூ.5.5 கோடி மதிப்பிலான அம்மா திருமண மண்டபத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.