முக்கிய செய்திகள்
அயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய இந்து மகாசபை முடிவு. அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக இந்து மகாசபை மனு தாக்கல் செய்ய முடிவு.
2019ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி: தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்டார்.
டிச. 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் ஊராட்சிகளின் விவரம் வெளியீடு. எந்தெந்த நாட்களில் எந்தெந்த ஊராட்சிகளுக்கு தேர்தல் என்பது தொடர்பான அரசாணை வெளியீடு. 156 ஊராட்சிகளுக்கு முதல்கட்டமாக 27ம் தேதியும், 158 ஊராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாக 30ம் தேதியும் தேர்தல்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு. இந்தியாவில் குடியேறிய, முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மசோதா.வடகிழக்கு மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மசோதா தாக்கல். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு, மக்களவையில் அமளி.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 11ம் வகுப்பு படித்த மாணவர்கள், மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் – தமிழக அரசு அனுமதி.
பாக், வங்கதேசம், ஆப்கனிலிருந்து வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சமணர், பௌத்தர்கள் உள்ளிட்ட 6 மதத்தினருக்கு குடியுரிமை வழங்கும் விதத்தில் மசோதா தாக்கல்.இந்த மசோதாவின் படி முஸ்லீம்கள் இனி குடியுரிமை பெற முடியாது. முஸ்லீம்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்படாததற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு. நேர்முகத்தேர்வு வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் tnpsc.gov.in இணைய தளத்தில் வெளியீடு.
எஸ்.பி.ஐ., கடனுக்கான வட்டி குறைப்பு! கடனுக்கான வட்டி விகிதம், 0.1% குறைக்கப்படுவது நாளை முதல் அமலுக்கு வரும் என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.