புது தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனை
புது தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனை
மருத்துவமனைகளில் உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், பிரேத பரிசோதனையின்போது உடலை அறுப்பதால் இறந்தவரின் உறவினர்கள் வேதனைப்படுவதாக குறிப்பிட்டார்.
இதனால், உடலை கண்ணியமாக நடத்தும் வகையில், இறந்தவரின் உடலை கூறு போடாமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பத்தை டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.
6 மாதங்களில் இது நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.