ம(ஊ)னம் – ஜெ.ஜீவா ஜாக்குலின்
ம(ஊ)னம் – ஜெ.ஜீவா ஜாக்குலின்
அரிது என்றாள்
ஔவை மானிடப்பிறப்பை
அதனினும் அரிது
சிலருக்கு பிறப்பில்
மானிட பிறப்பில் தான்
மாசு
மனங்களில்
சுற்றும் பூமியில்
சுற்றமும்
ஒதுக்கும்
அரசும் பிரிக்கும் சதவீத
அடிப்படையில்
சான்றளிக்கும்
சாமானியனுக்கு
மனங்களில் எத்தனை
மர்மம்
மாண்டது மனித நேயமும்
அனுபவத்தின் வலியே
கருவின் மொழி
வாழட்டும் எளியோர்
வீழட்டும் வலியோர்
ஊனம் தடையல்ல
ஊன்று வழியல்ல
வானமே எல்லை என
வாழ்ந்து காட்டும்
மனிதநேய மனம்
வாழ்த்தட்டும் உன்னை
சர்வதேச ஊனமுற்றோர் தினம் இன்று