நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!

 நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
     திமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!!!
     நல்லவேள… ஐயா எம் ஆர் ராதா உயிரோட இல்ல…
********************************
     தமிழக பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை. பாஜக தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா.
      நீங்களும் தலையால தண்ணி குடிச்சு தான் பாக்குறீங்க தமிழ்நாட்டில…. மலர மாட்டேங்குதேப்பா…..
**************************************
     குடியுரிமை சட்டத் திருத்த மசோதா. வடகிழக்கு மாநில தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை .
     என்னாங்க தினம் தினம் ஏதாவது ஒரு சட்டத்த திருத்தி கிட்டே இருக்கீங்க ….இதெல்லாம் நல்லதுக்கு இல்லையே…..
****************************************
      இந்தியாவுடன் நேரடியாக போர்களில் வெற்றி பெற முடியாத காரணத்தால் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கையில் எடுத்துள்ளது- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
      உள்நாட்டுல உங்க தப்பு எதையாவது மூடிமறைக்கணும்னா உடனே பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஓடிருவீங்களே… ஐயோ… ஐயோ…
*****************************************
        மகாராஷ்டிரத்தில் சிவசேனை- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சிஅமைத்தது நெறிமுறை அற்றது .உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான ராம் நாயக் கருத்து.
       அடடே !!! அப்ப அங்க நடு ராத்திரியில நடந்துச்சே ஒரு பதவி ஏற்பு… அது ரொம்ப நெறிமுறையா  நடந்ததாங்க….
*************************************

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...