வானிலை ஆய்வு மையம்

 வானிலை ஆய்வு மையம்
லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு 

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் . 
கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு .தமிழகத்தில் இன்று (டிச.01) பரவலாக பலத்த மழை பெய்தது. மதுரை, சென்னை, கோவை, குமரி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டியது. பலத்த மழையின் காரணமா பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க, 24 மணி நேரமும் செயல்படும், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 
சென்னை மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கி இருந்தால், 044-25384520, 044-25384530, 044-25384540 மற்றும் 94454-77205 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு.கனமழை காரணமாக குன்னுார் – மேட்டுப்பாளையம் மலை ரயில் நாளை முதல் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் நாளை விடுமுறை! 
கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை; அதீத கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் சீதாலட்சுமி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...