அருண் விஜய் இன் AV36 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!

 அருண் விஜய் இன் AV36 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் நடிகர் அருண் விஜய்யின் 36வது படத்திற்கு ‘ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான், பார்டர் போன்ற திரைப்படங்களில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து அருண் விஜய்யின் 36வது படத்தை மான் கராத்தே இயக்குநர் திருக்குமரன் இயக்குகிறார்.

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு சாம் CS இசையமைக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக சித்தி இத்வானி நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இன்று வெளியிட்டுள்ளார். AV36 படத்திற்கு ‘ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரை பார்த்தால் அருண் விஜய் இப்படத்தில் இருவேடங்களில் நடித்துள்ளார். தடம் படத்திற்கு பின் அருண் விஜய் இருவேடங்களில் நடிக்கும் திரைப்படம் ரெட்ட தல என்பது குறிப்பிடதக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...