‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்பு – சென்னைப் பல்கலைக்கழகம்..!

 ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்பு – சென்னைப் பல்கலைக்கழகம்..!

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் இப்பல்கலைக்கழகம் 2010-11 ஆம் கல்வி ஆண்டு முதல் “சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்ட” ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. வருகின்ற கல்விஆண்டில் (2024-2025) இந்த இலவசக் கல்விதிட்டத்தின்கீழ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2023-2024 கல்வி ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்பிற்கு வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருட வருமானம் ரூபாய் மூன்று லட்சத்திற்கு (ரூ.3,00,000/-) மிகாமல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் விவரம் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களின் விவரம் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) உள்ளது. இலவசக் கல்வி திட்ட விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும். இணையத் தளத்தில், எல்லா மென்பிரதிகளுடன் (softcopies of certificates), பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்”

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...