‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – தி​ரைவிமர்சனம்

 ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – தி​ரைவிமர்சனம்

ஒரு பெரிய ஜோசியர் கிட்ட என் கைய நீட்டி கேட்டேன். நான் 90 வயசு வர வாழ்வன்னு சொன்னான். இப்ப நான் செத்துட்டண்ணா என் பணம் எனக்கு திரும்ப வேணும். இல்ல ஜோசியக்காரன தேடி சாவடிப்பன்” என்று ஆரம்பக் காட்சியிலேயே துப்பாக்கி முனையில் தொடங்கும் வாய்ஸ் ஓவர் படம் முழுக்க விரவிக்கிடக்கிறது. காட்சி வழி கதை சொல்லலை மட்டுமே விரும்பும் புதிய அலை இயக்குனர்கள் மத்தியில் கவுதம் மேனன் Voice Over Narrativeவை க்ரிஸ்பாக கையாண்டிருக்கிறார்.

தனுஷுக்கு அண்ணனாக வரும் சசிகுமாருக்கு வழக்கத்துக்கு மாறான கச்சிதமான கதாப்பாத்திரம். வில்லனாக வரும் செந்தில் வீராசாமி மிரட்டல்.


தர்புகா சிவாவின் இசையில் படம் முழுக்க இனிமையாக இழைந்தோடுகிறது. அனைவரும் எதிர்பார்த்த மறுவார்த்தை பேசாதே காதுக்கு இனிமை ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரமஹம்சா மற்றும் ஜோமோன் டி ஜான் மும்பையின் இருளையும், பொள்ளாச்சியின் ரம்மியத்தையும் அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக தனுஷின் மனநிலையை பிரதிபலிக்க நிறங்களை கையாண்ட விதம் சூப்பர்தனுஷ் ஒரு கல்லூரி மாணவர். கல்லூரியில் நடக்கும் ஷூட்டிங்கில் நடிக்கும் மேகா ஆகாஷுக்கும் அவருக்கும் காதல் மலர்கிறது. திருமணம் செய்துகொள்ள வீட்டுக்கு அழைத்து செல்கிறார். ஆனால் மேகாவை நடிக்க வைத்து பணம் பார்க்க நினைக்கும் செந்தில் வீராசாமி அங்கிருந்து அவரை அழைத்து செல்கிறார்.

வருடங்கள் உருண்டோட, காதலை தூக்கி எறிந்த தனுஷுக்கு மீண்டும் மேகாவிடம் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. அது எப்படி ஒரு உயிரைக்குடிக்கும் தோட்டா அவரை நோக்கி பாயும் அளவு வாழ்வை புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதை


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...