பிரியங்கா இறந்த இடத்திற்கு அருகே மீண்டும் ஒரு பெண்ணின் எரிக்கப்பட்ட சடலம்
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்வுகளை எழுப்பி உள்ளது. தற்போது அவரது மரணம் தொடர்பாக 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் பிரியங்கா மரணம் குறித்து தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் மொஹம்மது மஹ்மூத் அலி பேட்டி அளித்திருக்கிறார்.
அதில், ” இந்த சம்பவத்தை நினைத்து நாங்கள் வருத்தம் கொள்கிறோம். குற்றங்கள் நடக்கிறது ஆனால் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, குற்றங்களை கட்டுப்படுத்துகின்றனர். படித்த பெண்ணாக இருந்தாலும் அவர் ஏன் 100க்கு போன் செய்யவில்லை என்று கேட்டு உள்ளார் அவரின் பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது பகல் நேரங்களிலேயே மெத்தனமாக நடந்துகொள்ளும் அவசரப் போலீஸ் இரவு நேரத்தில் என்ன செய்யப்போகிறார்கள் திரைப்படங்களில் மட்டுமே அப்படி துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நெட்டிசன்ஸ் கோபமாக பதிலளித்து உள்ளார்கள்
இம்மாதிரியான குற்றங்களில் எப்போதுான் பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவதை நிறுத்தப்
போகிறார்களோ தெரியவில்லை பிரியங்காவின் உடல் ஹைதராபாத்தில் உள்ள பூரணபுல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தன் மகளை இழந்து கதறி அந்த அன்னையின் அழுகுரலும் முகத்தில் புதைந்திருந்த சோகமும் யாரையும் கண்கலங்க வைத்துவிடும்
கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் குற்றவாளிகள் நால்வரையும் 376, 302 பி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நிர்பயா சட்டத்தின் கீழும் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொஹம்மது ஆரிஃப் லாரி டிரைவராகவும், ஜொல்லு சிவா(20), ஜொல்லு நவீன்(20), சிந்தகுண்டா சென்னகேசவலு ஆகிய மூவரும் லாரி கிளீனர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.