சிவகார்த்திகேயன் – யுவன் காம்போவில் அதிரும் “ஹீரோ” சாங்..!

 சிவகார்த்திகேயன் – யுவன் காம்போவில் அதிரும் “ஹீரோ” சாங்..!

‘ஹீரோ’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டிருந்தார். இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘மால்டோ கிட்டபுலே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ இம்மாத தொடக்கத்தில் வெளியானது.


தற்போது அதைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் டிராக்கான ‘ஹீரோ’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இப்பாடல் ஹீரோவுக்கான அடையாளத்தை கூறும் விதமாக அமைந்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படத்தின் ‘மால்டோ கிட்டபுலே’ என்ற சிங்கிள் டிராக் பாடலை போல், ‘ஹீரோ’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகவுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...