வாஸ்துபடி பணப்பெட்டியை வைத்து செலவு, வரவு செய்ய வேண்டும்?

 வாஸ்துபடி பணப்பெட்டியை வைத்து செலவு, வரவு செய்ய வேண்டும்?
*பூஜை அறையில் பணத்தை 
வைக்கக் கூடாதாம்..!
ஏன் என்று தெரியுமா?*  
வாஸ்துபடி நம் வீட்டில் பணப்பெட்டியை எந்த இடத்தில் வைத்து பணத்தை எடுத்து செலவு, வரவு செய்ய வேண்டும்?
வீட்டின் தென்மேற்கில் உள்ள அறையில் தான் நாம் பணப்பெட்டியை வைக்க வேண்டும். ‘பணத்தை எப்போதும் மரப்பெட்டியில் தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் ‘தேக்கு மரம்” என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத்தன்மை நம்மிடம் பணத்தை தங்கிட செய்யும்.”
வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச்சுவர் ஜன்னலுடன் இருக்க வேண்டும். கதவு என்பது மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். காற்றோட்டமும், சூரியவெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜன்னல்கள் திறந்திருப்பது நல்லது.
பணம் எப்போது வந்தாலும் அதை எந்த காரணத்தை கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் நூறு, ஆயிரம், லட்சம் எனப் பல பேர்களின் கைகளுக்கு சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத்தன்மையுடன் வைத்திருப்பதால் அதை பூஜையறையில் வைக்க வேண்டாம்.
பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அது நம் வீட்டிற்குள் வந்து பறந்துபோகும் சிட்டுக்குருவியை போன்றது. அதை சுதந்திரமாக பறக்கவிடுங்கள். நல்ல விஷயங்களுக்கு தாராளமாக செலவு செய்யுங்கள்.
உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். அப்போதுதான் பணம் உங்களை தேடி மீண்டும் மீண்டும் வரும். அளவுக்கு மீறி பணம் வந்தாலும் ‘சிக்கனமாக இருக்கிறேன்” என்று பணத்தை இறுக்கிப்பிடித்து வைத்திருந்தால், அதை அவர்கள் ஒருநாளும் அனுபவிக்கமாட்டார்கள். வேறொருவர்தான் அந்த பணத்தை செலவு செய்து வாழ்வார்.
உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காக பெருகும். பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும், குறை குறையோடு சேரும் என்பதால், 2000 ரூபாய் நோட்டாக வையுங்கள்.  
பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள். பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பணத்திற்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...