உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

 உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்ததால்,  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் நிலவி வருகிறது.  கோவை சீசன் முன்னிட்டு அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்து செல்கின்றனர்.  குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,  படகு இல்லம்,  தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் ரம்ஜான் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.  மேலும் பூங்காவில் பூத்துள்ள மலர்களை கண்டு ரசித்தும் வானுயர்ந்து காணப்படும் மரங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தவாறு பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விளையாடி விடுமுறை நாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் குறுகிய நகரமான உதகை நகரில் சுற்றுலாப் பயணிகள் வருகை
அதிகரித்துள்ளதால் நகரின் முக்கிய சாலைகளான உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலை, உதகை கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன.  வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உதகை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...