நாய்க்குட்டி இல்லை டிங்கோ வாஆஆ ………

என்ன இது நாய்க்குட்டி இல்லை – அதிர வைக்கும் டி.என். ரிப்போர்ட்

நாய்க்குட்டி என்று நினைத்து நீங்கள் வளர்த்து வந்த உங்கள் செல்லப்பிராணி, உண்மையில் ஒரு நாயல்ல என்று தெரிய வந்தால் எப்படி உணர்வீர்கள்,அப்படித்தான் நடந்திருக்கிறது இப்போது. மரபணு பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு இது நாயல்ல, இது ஒரு ஆஸ்திரேலிய அல்பைன் டிங்கோ என்ற உயிரினம் என்பது தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் குடிமகன் ஒருவரது இல்லத்தில் பின்புறத் தோட்டத்தில். ஒரு நாய்க்குட்டி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது மரபணு பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு இது நாயல்ல, இது ஒரு ஆஸ்திரேலிய அல்பைன் டிங்கோ என்ற உயிரினம் என்பது தெரிய வந்துள்ளது. பல்லுயிர்பெருக்கத்தால் இது போன்ற உயிரினங்கள் உருவாவது வழக்கமான ஒன்றுதான் என்று பலரும் சொல்லி வைந்த நிலையில், இதன் மரபணு சோதனை முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதாவது 100 சதவீதம் கலப்பற்ற டிங்கோ இனம் இது. 

ஆஸ்திரேலிய டிங்கோ நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி அறிவித்தது. இதன் முடிவுகள், இந்த உயிரினம் நாயல்ல அது ஒரு ஆஸ்திரேலிய டிங்கோ என்று தெரிவித்தன அதன் பிறகுதான் மரபணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.. தெருநாயைப் போல என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அது வெறித்தனமான ஒரு காட்டு விலங்கு என்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வான்டி என்று பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்த குட்டி டிங்கோ கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு குடியானவரின் வீட்டுப் பின்புறத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் காட்சியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. விக்டோரியா மாநிலத்தின் வாண்டிலிகாங் என்ற கிராமத்தில் இது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், அழிந்து வரும் விலங்கினங்கள் பட்டியலில் இருக்கும் ஒரு விலங்கு இது என்று ஆஸ்திரேலிய பசிபிக் அறியல் அறக்கட்டளை தெரிவிக்கின்றது. வேட்டையாடுதல், இனப்பெருக்கமின்மை, அரசின் அழிவுத்திட்டங்கள் மற்றும் காடழிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த இனம் வெகு வேகமாக அழிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!