விரைவு செய்திகள்

 விரைவு செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

பிராய்லர் கோழிகளின் வளர்ச்சிக்காக தடை செய்யப்பட்ட மருந்துகள் பயன்படுத்துவதை தடுக்க பண்ணைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்.

வங்கதேசம்: 2016 டாக்கா குண்டு வெடிப்பு வழக்கில், 7 தீவிரவாதிகளுக்கு, தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் வரும் 29ம் தேதி தொடக்கம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 1,000 ரூபாயுடன், பச்சரிசி, வெல்லம், கரும்பு துண்டு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

பிரதமருக்கு மட்டுமே
எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கும் சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை அடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை வரும் 11ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

ஹரியானாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அசோக், 53வது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராபர்ட் வதேரா மீதான நில மோசடி விவகாரத்தில், பலமுறை இடமாற்றம் செய்யப்பட்டவர் அசோக் கேம்கா.

ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...