விவசாயம்
விவசாயம்
வாழும் காலத்தில்
விசக்கசாயம் ஆனது விவசாயம்
வரும் காலத்தில்
வடித்த கஞ்சிக்கு
வடித்திடுவான் கண்ணீரை
கெட்டும் பட்டணம் போனவனும்
கிட்டாத கஞ்சிக்காக
கட்டாயம் கிராமம் வருவான்
ஏறுமுகமாக இருந்தவனும்
ஏரு பிடிப்பான் சோறுக்காக
முதலாளி முள் வேலியாவான்
பணக்காரன் பண்ணைக்காரனாவான்
ஆடம்பரம் ஆகும் உரம்
பீதாம்பரம் உடுத்தியவனும் -ஒரு
பருக்கைக்காக படுத்திடுவான்
உழைத்து உணவு உண்ண
கலப்பை காவல் கடவுளாக
நிலத்தை நம்புவான்-அந்த
காலத்திற்காக காத்திருப்போம்