நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
பொங்கல் தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் அறிவிப்பு.
அப்படியே பொங்கல் தொகுப்போட ரெண்டு கிலோ வெங்காயமும் கொடுத்தா உதவியா இருக்கும்….
*************************************
அதிமுக அரசுதான் சமூக நீதியை பாதுகாக்கிறது– முதல்வர் பழனிசாமி
சமூக நீதி காக்கும் அரணாக திமுக திகழும்– திமுக தலைவர் மு. க ஸ்டாலின்.
உங்க ரெண்டு கட்சியும் இல்லனா தமிழ்நாட்டுடைய சமூக நீதி பாதுகாக்கப்படும் –தனி ஒருத்தி
**************************************
மகாராஷ்டிர முதல்வராக ஞாயிறு இரவு பதவியேற்ற தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதல்வர் அஜித் பவார், ஆகியோர் பெரும்பான்மையை நிரூபிக்க போதிய ஆதரவு இல்லாததால் செவ்வாய்க்கிழமை காலை தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆட்சியமைக்க சிவசேனாவின் உத்தவ் தாக்கரே உரிமை கோரியுள்ளார். மகாராஷ்டிரத்தில் தொடரும் திருப்பங்கள்.
உலக வரலாற்றிலேயே இப்படி ஒரு அரசியல் பொழுதுபோக்கு நாடகம் இதுவரைக்கும் எங்கேயுமே நடந்திருக்காது. நல்லாத்தான் இருக்கு…… இது இன்னும் எவ்வளவு நாள் போகுதுன்னு பார்க்கலாம்….. ஓட்டு போட்டவங்க அவ்வளவுதான செய்ய முடியும்…..
***************************************
உள்ளாட்சித் தேர்தலில் அலுவலர்கள் எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமளிக்காமல் நேர்மையான முறையில் தேர்தல் பணியாற்ற வேண்டும். மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி.
எங்க சந்தேகம் அலுவலர்கள் மேல இல்லீங்க….. வாக்கு எந்திரத்து மேல தானுங்க…. அதுக்கு ஏதாவது வழி செய்ய முடியுங்களா ????
*****************************************